20 ஜன., 2009

கேள்வியும் பதிலும்-27:

"ஒரு மனிதனைப்போல் இன்னொருவர் இருப்பதும் இல்லை, பிறப்பதும் இல்லை. அப்படியிருக்க, நான் அவரைப்போல் வர ஆசைப்படுகிறேன், இவரைப்போல் வரவேண்டும் என்பது என் லட்சியம் என்றெல்லாம் கூறுவது ஏன்?" (விஜயலட்சுமி, பொழிச்சலூர்)
"ஒரு 'இன்ச்பிரேஷனுக்குத்தான்!' மூக்கு, கண், வாய் ஒரே மாதிரி இல்லாமல் இருக்கலாம். லட்சியங்கள் ஒரே மாதிரி இருக்க முடியும் அல்லவா? 'மாவீரன் அலெக்சாண்டர் போல நானும் வரவேண்டும்' என்று ஆசைப்பட்டவர் ஜூலியஸ் சீசர். செங்கிஸ்கானைப்போல ஆக வேண்டும் என்று தைமூர் விரும்பினான். அப்பாவைப் பின்பற்றி மகனும் பிற்பாடு எவரெஸ்ட் சிகரம் ஏறி கொடி நாட்டியது உங்களுக்குத் தெரியுமா? - டென்சிங் மகன்!
நன்றி: ஆனந்த விகடன், 22.10.2008.

1 கருத்து: