6 மே, 2015

ஸ்ரீசிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர் சன்னிதித் திருமுறை-8:

ஸ்ரீசிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர் சன்னிதித் திருமுறை-8:


மலைமுழையில் உற்றாலென் மாமருந் துண்டாலென்
கலைமுழுதுங் கற்றாலென் காணார் – இலைநிலவு
வேல்பிடித்த கையான் வியன்போரூர் ஐயன்இரு
கால் பிடித்தால் காண்பார்கதி.

2 மே, 2015

ஸ்ரீசிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர் சன்னிதித் திருமுறை-7:


ஸ்ரீசிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர் சன்னிதித் திருமுறை-7ம் பாடல்:

ஏது பிழைசெய்தாலும் ஏழையேனுக் கிரங்கி
தீது புரியாத தெய்வமே – நீதி
தழைக்கின்ற போரூர் தனிமுதலே நாயேன்
பிழைக்கின்ற ஆறுநீ பேசு.