
என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
30 ஜூலை, 2022
29 ஜூலை, 2022
ஆன்மீக சிந்தனை
இன்று காலை நான் படித்த சேக்கிழாரின் பாடலைப் பகிர்கிறேன் .
♦♦
"பெருமையால் தம்மை ஒப்பார்
பேணலால் எம்மைப் பெற்றார்
ஒருமையால் உலகை வெல்வார்
ஊன்மேல் ஒன்றும் இல்லார்
அருமையாம் நிலையில் நின்றார்
அன்பினால் இன்பம் ஆர்வார்
இருமையும் கடந்து நின்றார்
இவரைநீ அடைவாய் என்று .
///////////////
பொருள் சுருக்கமாக:♦
சிவனடியார்கள் என்போர் பெருமையைச் சொன்னால் அவ்வகையில் அவர்களுக்கு நிகரானவர்கள் அவர்களே .
எம்மைப் போன்ற அன்பர் கூட்டத்தை அன்பால் ஈர்த்தவர்கள் .
மானுடம் ஒன்று [ சிவனடியார்கள் எக்குலமானாலும் ஒன்றே ] என்ற ஒருமையுணர்வால் உலகையே வெல்பவர்கள் . குறையொன்றும் இல்லாதவர்கள் . அருமையான நிலையில் நிற்பவர்கள் . அன்பின் வழியாக இன்பத்தை நுகர்பவர்கள் . நல்வினை தீவினை முதலான இருவினைகளால் பாதிக்கப்படாதவர்கள் . இவர்களை நினைந்து வாழ்வோம் . ♥♥
நன்றி :
திரு ராம்மோகன்ராஜ்,
சிதம்பர ராஜ்யம் வாட்ஸ்அப் குழு