கதிராற் கடன்முகந்து, கார்மேக நல்கி,
இதஞ்செய் இயற்கை என்றாய்!
இயற்கை எமது அன்னை, இறைவன் தந்தை. இயற்கை உலகன்னை, அவன் உலகிற்கு இதஞ் செய்கிறாள்; இனியன செய்கிறாள், எப்படி? உலகம் வாழ முதலில் வேண்டுவது மழை. கதிரவன் கிரணங்களாற் கடலை முகந்து, மழை மேகத்தைத் தருகிறாள் இயற்கை. அந்தக் கார்மேகம் குளிர்காற்றுப்பட்டு மழை பொழிகிறது, மண் செழிக்கிறது, பயிர் தழைக்கிறது. உயிர் பிழைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக