உள்ளொளியிற் பூத்த உயிர்வாழ்வில் சாதிமதச்
சல்லையிலை சச்சர வில்லை.
ஒவ்வொருவர் உள்ளத்தும் சுத்தான்மக்கதிர் நிலவுகிறது. அதுவே உள்ளொளி. அதனின்றே உயிர்வாழ்வு மலர வேண்டும். அத்தகைய வாழ்வே அத்யாத்ம வாழ்வு. அது சுத்த சமரச வாழ்வு. என் சாதி, என் மதம் என்ற மூடப் பிடிவாதங்கொண்டு தொல்லை செய்து உலகிற் சண்டை விளைவிக்கும் சாதிமதப் பூசல்கள் அத்தகைய சுத்தான்ம சமரச வாழ்விற்கில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக