பிறர்க்கென வாழும் பெரியாரைச் சேருந்
துறக்குமுங் காணாச் சுகம்.
துறக்கமாவது சுவர்க்கம், மோக்ஷம். அதன் இன்பம் பெரிதுதான். அதை விடப் பெரிய இன்பம் ஒன்றுள்ளது; அதுவே, எல்லா உயிர்களையும் தான் என்றெண்ணி அன்பு செய்யும் ஆனந்தம்! அந்த இன்பம் யாரைச் சேரும்? தன்னலம் விட்டுப் பிறர் நலமே போற்றி, அறப்பணி செய்து வாழும் பெரியாரையே அந்த இன்பம் தானாக வந்தெய்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக