எத்துணை ஆராய்ந்து இவ்வுலகிற் அன்புசெயல்
அத்துணை ஆன்ம விரிவு.
ஆன்மா ஓர் உடலிலேயே குறுக்கக்கூடாது; உலகளாவ விரிந்து விளங்கவேண்டும். அதற்கு வழியென்ன? இவ்வுலகை இறைவன் ஆலயமாக, அவன் அருளாடரங்கமாகக் கருதி அதிலுள்ள உயிர்களுக்கு அன்புசெய்தல், அந்த அன்புத் தொண்டினைக் காலத்திற்கேற்றதாக ஆராய்ந்து, வகையறிந்து, அமைதியாகச் செய்யவேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு அத்தகைய உலகளாவிய அன்பு செய்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு ஜீவான்மா அகிலான்மாவாக விரிந்து விளங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக