14 நவ., 2018

நூல் நயம்-2:

மசானபு ஃபுகோகா எழுதிய "ஒற்றை வைக்கோல் புரட்சி" என்ற உலகப்புகழ் பெற்ற நூலுக்கு லாரி கோர்ன் எழுதிய அறிமுக உரையிலிருந்து:

வேட்டையாடி உணவு சேகரித்த காலம் ஒன்றுதான் இயக்ற்கை வேளாண்மைக் காலம். பயிர்களை வளர்க்கத் துவங்கியது கலாச்சாரக் கண்டுபிடிப்பாகும். அதனால் அதற்கு அறிவும் முயற்சியும் தேவைப்படுகிறது. ஃபுகோகாவின் முறையில் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால் அது இயற்கையோடு ஒத்துழைப்பதில் இருக்கிறது. இயற்கையை ஆக்ரமித்து அதை 'மேம்படுத்துவதில்' அல்ல.

ஃபுகோகா இயற்கை வேளாண்மை, தனி மனிதனின் ஆன்ம நலனிலிருந்து உதிப்பதாகக் கருதுகிறார். நிலத்தை குணப்படுத்துவதும், ஆன்மாவைச் சுத்தப்படுத்துவதும் ஒரே செயல் என அவர் கருதுகிறார். இதை அடையும் ஒரு வழியாக ஒரு வாழ்க்கை முறையையும், ஒரு வேளாண்மை முறையையும் அவர் நம் முன்னே வைக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக