இன்று ஆனந்தரங்கம் பிள்ளையின் நினைவு நாள்.
(இவரது நாட்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு பிரபஞ்சன் அவர்கள் பாண்டிச்சேரியின் வரலாற்றை வானம் வசப்படும், மானுடம் வெல்லும் என்ற இரண்டு அற்புலமான நாவல்களை எழுதியுள்ளார். இதில் வானம் வசப்படும் நாவலுக்கு சாகித்ய அகதமி விருது கிடைத்தது).
ஆனந்தரங்கம் பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராக இருபத்தைந்து ஆண்டுகள் பணியாற்றினார். அக்காலத்தில் நடந்தவற்றை நாட்குறிப்பாக பதிவு செய்துள்ளார். தம் நாட்குறிப்புகளுக்குத் தினப்படிச் செய்திக்குறிப்பு, சொஸ்த லிகிதம் (சொஸ்த- தெளிந்த அல்லது உரிமையுடைய, லிகிதம்- கடிதம் அல்லது ஆவணம்) என்றே பெயரிட்டார். இடையில் சில நாட்கள் எழுதப்படாமலும் சில நாட்கள் குறிப்புகள் முழுமையின்றிக் காணப்பட்டாலும் இருபத்தைந்து ஆண்டு கால அரசியல், பொருளாதார, சமுதாய நிகழ்ச்சிகளின் பதிவேடாக இது அமைந்துள்ளது. ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பில் வரலாற்றுச் செய்திகள், அரசியலமைப்பு, நிருவாகமுறை, பிரெஞ்சுப்படை காரைக்காலைப் பிடிக்கச் சென்று தோல்வியடைந்தது, தில்லியின் மீதான பாரசீகப் படையெடுப்பு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கிய செய்திகள், இலபூர்தொனே கப்பல் பிரெஞ்சு நாட்டிலிருந்து சென்றது, வெளிநாட்டுப் பயணிகள் இந்தியா வந்து சென்ற நிகழ்வுகள் போன்ற முக்கிய வரலாற்றுச் செய்திகள் இடம் பெறுகின்றன. எனவே ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பு ஒரு வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்கிறது.
நன்றி: தமிழ் விக்கிப்பீடியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக