8 மார்., 2020

வரலாற்றில் சில மைல் கற்கள் : மகளிர் தினம்

மார்ச் 8ம் நாள் உலகம் எங்கும் மகளிர் தினம் கொண்டாட படுகிறது. 

இதன் வரலாற்று உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். எதற்காக இந்த நாள் வந்தது என்று. 

பதிவில்  உள்ள புகைப்படம் புரட்சி வீரன் லெனின். 1924ம் ஆண்டு தனது 53வது வயதில் மரணம் அடைந்த இந்த வரலாற்று புரட்சி மகனை சுமார் 88 ஆண்டுகள் அடக்கம் செய்யாமல் இந்த மகனின் உடலை பாது காத்து மக்களின் பார்வைக்கு வைத்தனர். உலக வரலாற்றை புரட்டி போட்ட புரட்சியாளன் லெனின். 

உலகம் எங்கும் இன்று கொண்டாடப்படும் மகளிர் தினம் இந்த புரட்சி வீரன் தான் காரணம்.......... முகநூலில் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்லி விட்டால் மகளிர் தினம் பெருமை அடைந்து விடுமா? 

1917ம் ஆண்டு மார்ச் 8ம் நாள்  பெட்ரோ கிராடு நகரில் வைபோர்க் என்ற இடத்தில்  ரஷ்யாவில் ஏற்பட்ட பெண்களின் புரட்சி தான் இன்று மகளிர் தினம். கொத்தடிமைகளை போல பெண்களை பணி செய்ய வைத்து குறைந்த ஊதியம் கொடுத்து வறுமையில் வாடிய பெண்கள் கொதித்தழுந்து  ரஷ்யாவின் வீதிக்கு வந்து போராட்ட களம் அமைத்து பல ஆயிரம் பெண்கள் நடுவீதியில் எழுப்பிய ஆவேச குரல் கண்டு  துணைக்கு ஆண்களும், கல்லூரி மாணவ மாணவியர், பள்ளி குழந்தைகள், அரசு ஊழியர்கள் பல லச்சம் பேர்  ரஷிய வீதியில் பெண்கள் ஆண்கள் பதாகை ஏந்தி எழுப்பிய குரல் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம வேலை வாய்ப்பு...... சம ஊதியம் சம உரிமை.....இந்த முழக்கத்தை லெனின் அரசு ரஷ்யாவில் அமைந்த போது சட்டமாக ஆக்கி மார்ச் 8ம் நாளை உலக மகளிர் தினம் என்று கொண்டாட வேண்டும் என்று பிரகடன படுத்திய பெருமை லெனினுக்கு.......... 

பின்னர் ஐ நா சபையில் தீர்மானமாக நிறைவேற்ற பட்டு இன்று உலகம் எங்கும் இந்த நாளை கொண்டாடி வருகிறோம்.
(பகிர்வு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக