5 மார்., 2020

பக்தி பாமாலை: வள்ளலார் பாடல்கள் : முறையீடு



மனதை மாற்றி கண்ணீர் வரவைக்கும் பாடல் வரிகள்

714,337 views
Jul 11, 2017
Tamil discourse தேடல் முன்னோர்கள் வழி
29.6K subscribers

வள்ளலார் பாடல்கள் : முறையீடு

1. மருந்தறியேன் மணியறியேன் மந்திர மொன் றறியேன்
மதியறியேன் விதியறியேன் வாழ்க்கைநிலை யறியேன்
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
செய்தறியேன் மனமடங்குந் திறத்தனிலோ ரிடத்தே
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
எந்தைபிரான் மணிமன்றம் எய்தவறி வேனோ?
இருந்திசை சொலவறியேன் எங்ஙனம் நான் புகுவேன்?
யார்க்குரைப்பேன் என்ன செய்வேன் எதுமறிந் திலனே!

2. அகங்காரக் கொடுங்கிழங்கை அகழ்ந்தெறிய அறியேன்
அறிவறிந்த அந்தணர்பாற் செறியுநெறி அறியேன்
நகங்காண முறுதவர்போல் நலம்புரிந்து மறியேன்
நச்சுமரக் கனிபோலே இச்சைகனிந் துழன்றேன்;
மகங்காணும் புலவரெலாம் வந்துதொழ நடிக்கும்
மணிமன்றந் தனையடையும் வழியுமறி வேனோ?
இகங்காணத் திரிகின்றே னெங்ஙனநான் புகுவேன்?
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதுமறிந் திலனே!

3. கற்குமுறை கற்றறியேன்: கற்பனகற் றறிந்த
கருத்தர்திருக் கூட்டத்திற் களித்திருக்க அறியேன்:
நிற்குநிலை நின்றடியே னின்றாரி னடித்தேன்:
நெடுங்காமப் பெருங்கடலை நீந்தும்வகை அறியேன்:
சிற்குணமாம் மணிமன்றிற் றிருநடனம் புரியுந்
திருவடியென் சென்னிமிசைச் சேர்க்கவறி வேனோ?
இற்குணஞ்செய் துழல்கின்றே னெங்ஙனநான் புகுவேன்
யார்க்குரைப்பே னென்செய்வே னேதுமறிந் திலனே!

4. தேகமுறு பூதநிலைத் திறஞ்சிறிது மறியேன்
சித்தாந்த நிலையறியேன் சித்த நிலையறியேன்:
யோகமுறு நிலைசிறிது முணர்ந்தறியேன் சிறியேன்
உலகநடை யிடைக்கிடந்தே உழைப்பாரிற் கடையேன்:
ஆகமுறு திருநீற்றி னொளிவிளங்க அசைந்தே
அம்பலத்தி லாடுகின்ற அடியையறி வேனோ?
ஏகவனு பவமறியே னெங்ஙனநான் புகுவேன்?
யார்க்குரைப்பே னென்செய்வே னேதுமறிந் திலேன்!

5. வரையபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன்
மரணபயந் தவிர்த்திடுஞ்சன் மார்க்கமதை அறியேன்:
திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடந்தே
தெள்ளமுத முணவறியேன் சினமடக்க அறியேன்:
உரையுணர்வு கடந்துதிரு மணிமன்றந் தனிலே
ஒருமைநடம் புரிகின்றார் பெருமையறி வேனோ?
இரையுறுபொய் யுலகினிடை யெங்ஙனநான் புகுவேன்?
யார்க்குரைப்பே னென்செய்வே னேதுமறிந் திலனே


"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடிய வாள்ளலாரின் இனிமையான பாடல் வரிகள்.

இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது.

நன்றி: Tamil discourse தேடல் முன்னோர்கள் வழி மற்றும் யூட்யூப்.

வள்ளலார் ஸ்ரீராமலிங்க ஸ்வாமிகளின் திருவடிகளைப்
போற்றுகின்றேன்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக