15 பிப்., 2021

சாதனையாளர்கள் : இயற்கை விவசாயி இராமச்சந்திரன்

கரிசல் காட்டில் காரட், பீட்ருட், முள்ளங்கி, முட்டைக்கோசு மற்றும் காளிபிளவர் என குளிர்மலைப்பகுதிகளில் மட்டுமே விளையும் என நினைத்த காய்கறிகளை, வானம் பார்த்த பூமியான விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி அருகே உள்ள மாந்தோப்பில் பயிரிட்டு சாதனை படைத்துள்ளார் இயற்கை விவசாயி இராமச்சந்திரன்! உப்பை தவிர,தன் வீட்டு சமையலுக்கு தேவைப்படும் கடுகு,சீரகம்,வெள்ளைப்பூண்டு உள்ளிட்ட இன்னபிற அத்தனையும் விளைவித்து சாதனை படைத்து வருகிறார்! 

விவசாயிகள் காலங்காலமாக அரும்பாடுபட்டு நம் பசிப்பிணியை போக்கி வருகிறார்கள் என்பது நாம் அறிந்துகொள்ள வேண்டிய மறுமலர்ச்சி காலம் இது. மண்ணில் விழும் அத்தனையும் மண்ணாகும் போது, விதைகள் மட்டும் எதிர்நீச்சல் போட எப்படி இறைவன் அருளினானோ, அதைப்போலத்தான் அவற்றை விளைவிக்கும் சூட்சுமத்தையும் விவசாயி உருவில் படைத்து நமக்குத் தந்தான் இறைவன்!

உயிரை கொடுப்பவன் இறைவன் என்றால்,அந்த உயிரை காக்கும் உடம்பை வளர்ப்பவனும் இறைவனே!

நன்றி :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக