15 அக்., 2021

நூல் நயம் : பசித்த மானிடம் - கரிச்சான்குஞ்சு


காமம் , அதிகாரம் இரண்டும் மனிதனின் பெரும்பசி, தீரா போதை. கணேசன் , கிட்டா இருவருக்கும் அது நிறையவே இருக்கிறது. அவை கிடைத்தால்தான் நிம்மதி என்று பள்ளி பருவ வயதில் இருந்தே ஓடுகின்றனர்.

கணேசனுக்கு ராவுத்தர் , ஜவுளி கடைக்காரரில் தொடங்கி (இது இன்றும் பேச இயலாத அல்லது பேச தயங்கும் ஓரினச்சேர்க்கை பற்றி அந்த காலத்திலேயே பேசிய தமிழின் முதல் நாவலாம்) தன் டீச்சர் மனைவி, பென் டாக்டர், கோதை (இரண்டாவது மனைவி) என பலரிடமும் காம இன்பம் கிடைக்கிறது.

கிட்டாவிற்கு தன் மனைவி, மறைந்த தன் அண்ணனின் மனைவி , தன் மனைவியின் சகோதரி , தன் தொழில் கூட்டாளியின் மனைவி என பலரிடமும் கிடைக்கிறது கூடவே அவன் ஆசைப்பட்ட அதிகாரமும் , தொழிலும் , பணமும்,வெற்றியும் கிடைக்கிறது.

எது கிடைத்தால் நிம்மதி , மகிழ்ச்சி என்று அவர்கள் நினைத்தார்களோ அது அவர்களுக்கு கிடைத்தாலும் ஓர் நடுத்தர வயதை அடைந்ததும் மிஞ்சியது மன வருத்தம்,பழி, நோய், பகை , நிம்மதியின்மை இவையே.

இறுதியில் நிம்மதி ஆத்ம ஞானத்தை தேடுவதிலும் , பற்றற்ற வாழ்க்கை வாழ்வதிலும்தான் என்று கணேசன் உணர்கிறான் , நிம்மதி என்பது அன்பான உறவுகளும் , அமைதியான வாழ்வும்தான் என கிட்டா தேடுகிறான்.

இந்த நாவலை போகத்தின் வழியாக ஞானத்தை பற்றி பேசும் முயற்சியாக கொள்ளலாம், காமத்தை தவிர புரிந்துகொள்ள, சிந்திக்க நிறையவே இருப்பதாக தோன்றுகிறது இந்த புத்தகத்தில்.

நன்றி :

Mr.Sarav Kb, 
வாசிப்பை நேசிப்போம், 
முகநூல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக