#ஆண்டுவிழா
#நாவல்
#RM_192
41. வாடிவாசல் - சி.சு.செல்லப்பா
காரி என்ற காளையை பிடிக்க முயன்று இறந்த தன் தந்தைக்காக மகன் காரி காளையை அடக்க முயன்று வென்றானா? இல்லையா என்பதுதான் நாவலின் ஒன்லைன் கதை.
இந்த கதை விளக்கப்பட்ட விதத்தில் நாவல் ஒரு சிறந்த தனித்துவத்தை பெறுகிறது. எழுத்துக்கள் அனைத்தும் காட்சிகளாக நம் கண்முன் தோன்றும் மாயாஜாலத்தை இந்த நாவல் தருகிறது.
கோர்வையான வட்டார மொழியில் விளக்கப்படும் நிகழ்வுகள், ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை பற்றிய விவரிப்புகள், காரி காளையும் கதாநாயகனும் நேருக்கு நேர் சந்திக்கும் நிகழ்வுகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆன விளையாட்டு எவ்வாறு மனிதர்களுக்கும் மனிதர்களுக்குமான அதிகார அரசியலாக மாறி உள்ளது என்பதையும் இந்நாவல் விளக்குவது சிறப்பு.
இந்த நாவலைப் படிக்கும் அனைவரும் புது அனுபவத்தை பெறுவர் என்பது உறுதி. கட்டாயம் வாசிக்க வேண்டிய நாவல்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக