படிச்சு முடிச்சாச்ச்ச்ச்.. 👍
(ஒரு தனி மனிதராக ஜெயமோகனை விரும்பாதவர்கள் இந்தப் பதிவை கடந்து சென்றுவிடலாம். தமிழின் முக்கிய நூலான 'விஷ்ணுபுரம்' பற்றிய ஒரு வாசகனாக எனது பதிவு இது.)
புத்தகம்: விஷ்ணுபுரம் (புதினம்)
எழுத்தாளர்: ஜெயமோகன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்
அளவு: 830 பக்கங்கள் !!!
முன்னுரையிலேயே சொல்லிவிடுகிறார் —தருக்கங்கள் அதிகம் இருக்கும் என்று. இரண்டாம் பகுதி முழுவதும் தருக்கங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது.
முதல் பகுதியில் விளக்கப்படும் விஷ்ணுபுரம் பற்றிய பிரம்மாண்டம் பிரமிப்பூட்டுகிறது. இவரது கற்பனை வளம் மிரட்டுகிறது.
மூன்றாம் பகுதியைப் படிக்க நிறையவே திடமும் நடுநிலைத்தன்மையும் தேவைப்படும். பிரளயம் என்பதை பிட்டு வைத்திருக்கிறார்.
பக்கத்திற்கு ஒரு கதாபாத்திரம் என அறிமுகம் செய்துகொண்டே போகிறார். ஒரு கட்டத்திற்கு மேல் அவற்றின் பின்புலங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாமல் சற்று தள்ளி நின்று வாசிக்கும் மனநிலை இயல்பாக வந்துவிடுகிறது.
பல அத்தியாயங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி இருந்தாலும் தொடர்ந்து படித்தால் வேறொரு அத்தியாயத்தில் அந்தக் கதாபாத்திரத்தின் முடிவு தெரிகிறது.
ஒரு வாசகனை சவாலுக்கு உள்ளாக்கும், மிரட்டும், ஆச்சரியமூட்டும், கனிவாக்கும், ஞானமூட்டும் படைப்பு இது.
தங்குதடையின்றி இதைப் படித்து முடிப்பதே நிச்சயம் வாசகனின் சாதனைதான்.
இதுதான் இப்படித்தான் என்று எதையும் திணிக்காமல், எல்லா விதமான நம்பிக்கைகளையும் வழிபற்றுதலையும் கண் முன்னே கடை விரித்து நமக்கு வேண்டியதை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரத்தைக் கொடுத்ததால் நிச்சயம் பாராட்டலாம்.
அரசர் காலத்தில் இருந்த பல இசைக் கருவிகளையும் பல மரபுகளையும் தெரிந்துகொள்ள முடிந்தது. கற்பனை வளம் புத்தகம் முழுக்க கரைபுரண்டு ஓடுகிறது.
கதையைப் பற்றி நிறையச் சொல்லி இனி படிக்கப் போகிறவர்களின் சுவாரசியத்தைக் குலைக்க விரும்பாததால் ஆழமாகச் செல்லவில்லை.
இதைப் படிக்கும் வாசகர்கள் யாவரும் அன்னப் பறவை போல இருந்து, தங்களுக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்ள முடிந்தால் இது நிச்சயம் ஒரு முறையாவது படிக்க வேண்டிய புதினம்.
ஒரு வாசகனாக நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகிறது —நம்மையும் அறியாமல் 👍
நன்றி :
சத்யஸ்ரீ எழுத்தாளர்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக