28 ஏப்., 2009

ஆத்திச்சூடி: விரிந்த பொருள் காணல்

அஃகம் சுருக்கேல்.

ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்திறமை ஒளிந்திருக்கிறது. முதல் படி, தனது தனித்திறமையை உணர்தல்; இரண்டாம் படி, அதை முறையாக வளர்த்தல்; மூன்றாம் படி, அதை வெளிக்கொணர்தல்; நான்காம் படி, அதை தனக்கும், தன்னைச் சேர்ந்தோர்க்கும், மற்றும் இந்த சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக்கல்.

2 கருத்துகள்:

  1. வியாபாரிகள் பொருள்களின் அளவை
    குறைத்தோ சுருக்கியோ வழங்கக் கூடாது எனபது தான் நான் இதுவரை அறிந்த பொருள்.

    உங்களுடைய புது விளக்கம் மிகவும் சிறப்பாக உள்ளது. மேலும் ஒளவை அனைவருக்கும் பொதுவானதாக
    பாடிக்கொண்டு வரும் பொழுது இடையில் ஒருவரி மட்டும்
    வியாபாரிகளுக்காக பாட வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது? எனவே உங்களுடைய
    புது விளக்கம் மிகவும் பொருத்த முடையதாக தோன்றுகிறது. ஆழமாக கற்றல் எனபது இது தானோ?
    -நெல்லை.

    பதிலளிநீக்கு