ஈசன் திருமொழியை எவ்வினத்தார் சொன்னாலும்
ஆசையுடன் கேட்ப தறிவு.
சர்வாத்ம சமரசத்திற்கு சர்வ மத சமரசம் துணை செய்யும். அருட்புலவர் வாக்கெல்லாம் ஈசன் திருமொழிகளே. அவை உள்ளத்திலுள்ள சுத்தான்மாவினின்றே மலர்கின்றன. அத்திருவாக்குகளை எங்கே, எவ்வினத்தார், எம்மதத்தார் சொன்னாலும் ஆசையுடனே, ஆர்வமுடனே விரும்பிக் கேட்பதே அறிவாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக