16 ஜன., 2020

வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள் : சரத்சந்திர சாட்டர்ஜி

சரத்சந்திர சட்டர்ஜீ ( 15 செப்டம்பர் 1876 – 16 சனவரி 1938) 

இன்று அவரது 
நினைவு நாள். 

இருபதாம் நூற்றாண்டின் வங்காள மொழி இலக்கியத்தில் ஒரு மாபெரும் அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். விளிம்புநிலை மக்களின் இலக்கியங்களை படைத்ததற்காக ரபீந்திரநாத் தாகூரால் பெரிதும் பாராட்டப் பெற்றார். சரத்சந்திரர் ஏழையாகப் பிறந்தார். இவர் எளிமையானவராகவும், விருந்தோம்பும் பண்புடையவராகவும், அடக்கமானவராகவும் இருந்தார். சரத்சந்திரர் மகாத்மா காந்தியை விமர்சித்துக் கொண்டிருந்த போதும் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து, ஹவுரா மாவட்டக் காங்கிரஸ் இயக்கத் தலைவராகவும் ஆனார். அவருடைய பதேர் தோபி(வழி வேண்டுவோர்) அக்கால புரட்சியாளர்களின் வேதப் புத்தகமாக கருதப்பட்டது. ஆங்கிலேய அரசால் இப்புத்தகம் தடை செய்யப்பட்டது.
[1/16, 08:38] Suri Jio: ’தேவதாஸ்’ எனும் கதையைப் பதினேழு வயதில் எழுதினார். 2013 ஆம் ஆண்டு வரையிலும்கூட இக்கதை பல மொழிகளிலும் மீண்டும் மீண்டும் திரைவடிவம் பெற்றுள்ளது.

நன்றி: தமிழ் விக்கிப்பீடியா

கருத்துகள் இல்லை: