17 ஜன., 2020

#நதியிலொருகூழாங்கல்#

உலகிலிருந்து விடைபெறுவதற்கு தன்னைத்தானே தயார் செய்து கொள்ளும் விசித்திரச் சடங்குதான் முதுமை. இதில், இந்த உலகின் சௌந்தர்யங்களை, இயற்கையின் அதியற்புத காட்சிகளை, நிசப்தம் பூத்து நிற்கும் பள்ளத்தாக்குகளைப் பார்க்காமல் உலகிலிருந்து விடைபெறுவதென்பது பாதிச் சாப்பாட்டில் எழுந்து கொள்வது போன்றதுதான்.

 முதுமை விசித்திரமான ஆசைகளைக் கொண்டது. அது கவனிக்கப்படாமலும் நிறைவேற்றப்படாமலும் போகும் போது ஏற்படும் துக்கம் பகிர்ந்து கொள்ள முடியாதது. ஒரு குழந்தையைப்போல தனது பேச்சை, செயல்களை யாவரும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்றுதான் முதியவர்கள் விரும்புகிறார்கள், விருப்பம் மறுக்கப்படும்போது ஒரு குழந்தை தேம்பி அழுவதைப்போல தேம்புவதற்கு அவர்கள் தயங்குவதே இல்லை. மரங்களில் தெரியும் பிரமாண்டம், விதையில் தெரிவதில்லை. 
ஒரு மனிதன் விதையாவதே முதுமை .

நன்றி : திரு எஸ்ராமகிருஷ்ணன்,
#துணையெழுத்து#

கருத்துகள் இல்லை: