9 மார்., 2020

நூல் நயம் : எஸ்ராவின், "சஞ்சாரம்"

புத்தகம் பெயர் : சஞ்சாரம்
ஆசிரியர்.         
எஸ். ராமகிருஷ்ணன்
Rm 163
25/6

ஆசிரியர்  எஸ் ரா எழுதிய நிறைய நூல்கள் படித்து இருப்பதாலும் சாகித்திய அகாதமி விருது பெற்றது என்பதாலும் இந்த புத்தகத்தை வாங்கினேன்

இந்த நாவல் நாதஸ்வர கலைஞர்களின் வலி மிகுந்த வாழ்க்கையை அவர்களின் வட்டார மொழியிலேயே பதிவு செய்து உள்ளார்

இசையை ஏற்றி இறக்கி வாசிப்பது தான் சஞ்சாரம் அந்த கலைஞர்களின் வாழ்க்கையை போல

மற்றவர்களை சந்தோச படுத்தும் இந்த கலைஞர்களின் வாழ்க்கை சந்தோசமாக இல்லை 

பக்கிரி மற்றும் ரத்தினம் என்ற நாதஸ்வர கலைஞர்கள் வழியாக இந்த கதை பயணம் ஆகிறது

ஒரு கிராமத்து கோவிலில் வாசிக்க சென்றவர்கள் இரு ஊர் காரர்கள் பிரச்சனையில்  நயினம் ஊதி கொண்டு இருந்தவர்களை நிறுத்துடா என்று அடித்து விடுகிறார்கள் பிறகு மரத்தில் கட்டி வைத்து விட்டு அவர்கள் பிரச்சனையை பேசி கொண்டு இருக்கிறார்கள் 

அவமானம் பிடுங்கி தின்ன என்ன செய்வது என்று இருக்கும் போது கோவில் பூசாரி கட்டுகளை அவிழ்த்து விட்டு ஓடி விடுங்கள் என்று சொல்லி விடுகிறார் ஆனால் வரும் போது அங்கு உள்ள பந்தலுக்கு தீ வைத்து விட்டு போய் விடுகிறார்கள் அது பெரும் ஊர் கலவரம் ஆகி விடுகிறது

அதன் பிறகு அவர்கள் ஓடி கொண்டே இருக்கிறார்கள் கதையும் அவர்கள் பின்னால் ஓடுகிறது 

கதையில் ஏராளமான கிளை கதைகள் அனைத்தும் வரலாற்று ஆவணம் 

பத்து வருடம் நாதஸ்வர கலைஞர்கள் களுடன் பழகி பல ஊர்கள் பயணம் செய்து அவர்கள் வாழ்க்கையை பதிவு செய்து இருக்கிறார் எஸ் ரா

செண்ட மேளம் மற்றும் ஆர்கெஸ்ட்ரா போன்ற புதிய வரவுகளால் அழிந்து போய் கொண்டு இருக்கும் இந்த நாதஸ்வர கலை பற்றிய நூல்

கலை ,கலாசாரம், பண்பாடு அழிக்க பட்டால் அந்த இனமும் விரைவில் அழிந்து விடும் அபாயம் இருக்கிறது

அனைவரும் படிக்க வேண்டும்

படித்து விட்டு மறக்காமல் உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு நமது பாரம்பரியமான நாதஸ்வரம் வாசிப்பை  கட்டாயம் ஆக்குங்கள் அந்த கலைஞர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றுங்கள்

நன்றி : திரு ஆனந்த் சடையப்பன்
மதுரை

கருத்துகள் இல்லை: