5 அக்., 2020

இன்று சில தகவல்கள் : ஹோமங்களின் பயன்கள்

அகத்தியர் தனத் “ஏம தத்துவம்” என்கிற நூலில் ஹோமம் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

பாரப்பா பார்தனிலே யிருக்குமட்டும்
பத்திகொண்டு டிசைந்துநீ ஓமஞ்செய்தால்
நேரப்பா பருதிமதி யுள்ளம் மட்டும்
நீமகனே பூரணமாய் வாழ்வாயப்பா
காரப்பா நித்தியகர்ம அனுஷ்டானங்கள்
கருணையுடன் செய்துகொண்டு கனிவாய்மைந்தா
தேரப்பா சிறப்புடனே ஓமஞ்செய்து
சிவசிவா விசயோகத் திறத்தைகாணே.

- அகத்தியர் -

ஹோமம் செய்வதனால் உண்டாகும் சிறப்புகளை அகத்தியர் இந்த பாடலில் கூறியிருக்கிறார். 

அதுபோல்  திருமூலர் அருளிய திருமந்திரத்தில் பல இடங்களில் ஹோமம் பற்றிய வரிகள் காணக் கிடைக்கின்றன. அவை பின்வருமாறு...

"ஓமத்திலேயும் ஒருத்தி பொருந்தினாள்"

"வின்னா விளம்பிரை மேவிய குண்டத்துச்"

"நாடறிமண்டலம் நலவிக் நலவிக் குண்டத்தும்"

"நின்ற குண்டம் நிலையாறு கோணமாய்"

பழந் தமிழகத்தில் அறுவடை முடிந்த பின்னர் வயலில் எஞ்சியிருக்கும் பயிர்களை கொளுத்தி விடும் பழக்கம் இருந்தது. இன்றும் கூட சில இடங்களில் இதனைக் காணலாம். இதன் பின்னர் மதம் சார்ந்த நம்பிக்கைகள் இருந்தனவா என்பது தெரியவில்லை.

ஆனால் அறிவியல் ரீதியாக இத்தகைய செயல்கள் நிலத்திற்குத் தேவையான சத்துக்களை தரும். இதை இங்கே குறிப்பிட காரணம் வரப்புகள் சூழ்ந்த வயல்வெளியில் வளர்த்த தீயின் சுருங்கிய அல்லது சுருக்கிய வடிவமே ஹோம குண்டங்களாயிருக்க வேண்டும். ஏனெனில் ஹோமங்கள் பூமியின் மீதுதான் வளர்த்திட வேண்டுமெனவும் கூறப்பட்டிருக்கிறது.

இந்த ஹோம குண்டங்களின் வடிவங்கள் என்ன?, 

அவற்றின் வகைகள் யாவை?, 

ஹோமங்கள் பூமியின் மீதுதான் செய்யப் படவேண்டும் என்கின்றனர். இந்த ஹோம கிரிகைகளில் வழிபடுபவர் கிழக்கு முகமாய் பார்த்து உட்காரவேண்டுமாம். மிக முக்கியமாக இந்த ஹோமங்களை எவரும் செய்திடலாம் என்கின்றனர். குறிப்பிட்ட இனத்தவர் மட்டுமே செய்திட வேண்டும் என்கிற இந்து மரபியலை சித்தர்கள் முழுமையாக நிராகரிக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஹோம குண்டங்களின் ஐந்து படிநிலைகளை கொண்டதாக அமைத்திட வேண்டுமாம். நடுவில் வட்டவடிவமான குழி அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர்

சில வடிவஙகளின் படங்கள் இணைப்பு.


நன்றி :
திரு.ஸ்ரீராம், குற்றாலம்,  சிதம்பர ராஜ்ஜியம்,  வாட்ஸ்அப் குழு 


கருத்துகள் இல்லை: