*அமைச்சர் ஒருவர் அந்த கிராமத்திற்கு குறைகள் கேட்க வருகிறார்.*
“ஐயா.. எங்களுக்கு இரண்டு பிரச்சினைகள் உள்ளன. அதை நீங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும்.”
“தாராளமாகச் சொல்லுங்க. உங்க குறைகளை போக்கத்தானே நான் இங்கே வந்திருக்கேன்”
*“முதல் பிரச்சினை.. இங்கே எங்களுக்கு அரசு மருத்துவமனை இருக்கு. ஆனா டாக்டர்தான் கிடையாது”*
அமைச்சரின் முகமெல்லாம் சிவக்கிறது, “ஏன் இவ்ளோ நாளா என் கவனத்துக்கு இதை கொண்டு வரலே?”
அக்கணமே பாக்கெட்டிலிருந்த செல்போனை எடுத்து, அரசு அதிகாரி யாரையோ விளித்து. கண்டமேனிக்கு சத்தம் போட்டு விளாசித் தள்ளுகிறார்.
“என்ன செய்வீங்களோ, ஏது செய்வீங்களோ எனக்குத் தெரியாது. நாளைக்கு காலையிலே இந்த கிராமத்துக்கு ஒரு டாக்டர் உடனே டூட்டியில் சேர்ந்தாகணும்”
காலரை தூக்கிவிட்டுக் கொண்டு பெருமிதத்துடன் கிராம மக்களைப் பார்த்து ‘உங்களோட முதல் பிரச்சினையை தீர்த்துட்டேன். *உங்க ரெண்டாவது பிரச்சினை என்ன? சொல்லுங்க..*
*“இந்த சுத்துப்பட்டு கிராமத்துக்கு எங்கேயும் இதுவரை செல்போன் கவரேஜ் அறவே இல்லீங்க ஐயா”*
*படித்ததில் ரசித்தது* 🙂
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக