மினிமலிசம் என்பது குறைவான பொருட்களுடன் வாழுதல்.
வீடு நிறைய பொருட்களை சேர்த்துவைத்தால் அதன்பின் பொருட்களுக்கு சேவை செய்தே வாழ்நாள் வீணாகிவிடும்.
நாலு பேர் இருக்கும் வீட்டில் 10- 20 தட்டுகள், 10- 20 டம்ளர்கள் புழக்கத்தில் இருப்பதை காணமுடியும். எப்போது பார்த்தாலும் கிட்சன் சிங் நிரம்பியே இருக்கும். பாத்திரம், கழுவி, கழுவி ஓய்ந்துபோய்விடுவார்கள் .
ஒரே தட்டை சாப்பிட்டுவிட்டு உடனே கழுவி வைத்தால், ஒரே டம்ளரில் நீரோ, காபியோ குடித்தவுடன் உடனே குடித்தவரே கழுவி வைத்தால் இத்தனை தட்டுகள் அவசியம் இல்லை.
"எப்போதாவது பயன்படும்" என நினைத்து சிங்கிள் பயன்பாட்டுக்கு வாங்கும் பொருட்களை கூட தூக்கிவீசாமல் பாதுகாத்து வைத்து (பிளாச்டிக் பை, பிளாஸ்டிக் கன்டெய்னர்) கடைசியில் அலமாரிகள் நிரம்பிவழிவதுதான் மிச்சம்.
வீட்டில் 20 தட்டு, 20 டம்ளர் இருந்தால் 10 தட்டு, 10 டம்ளரை எடுத்து மறைத்துவைக்கவும்...அவை காணாமல் போனதே யாருக்கும் தெரியாது.
பல பொருட்கள் இப்படித்தான்...
ஒரு அறை சும்மா இருந்தா நமக்கு பிடிக்காது.
"அந்த சுவர் காலியா இருக்கு. ஒரு பெயிண்டிங் மாட்டுவோம். அந்த கார்னர் காலியா இருக்கு. ஒரு பூச்செடி வைப்போம்.."
அதன்பின் ஆணி, பெயிண்டிங், பூச்செடிக்கு தண்ணி, போட்டோவை கழுவுவது துடைப்பது...என வேலைகள் கூடும்.
வீடு காலியாக இருப்பது தான் இருப்பதிலேயே சிறந்த அழகு 🙂
வீடு முழுக்க பொருள், வீடு சுத்தமாவே இல்லை, வேலை தீரவே இல்லை..என புலம்பினால் அதுக்கு காரணம் பொருட்களை இப்படி hoarding செய்து வைத்துக்கொள்வதுதான்.
பொருட்களுக்கு சேவை செய்தே நம் வாழ்நாள் கழிந்துவிடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக