#ஆண்டுவிழா
#நாவல்கள்
புத்தகம்: "காவல் கோட்டம்"
ஆசிரியர்: சு.வெங்கடேசன்
ஆறு நூற்றாண்டு மதுரையின் வரலாறு
(1310 - 1910)❤️
(1173 பக்கங்கள்)
இப்பனுவல் தடிமனே எனினும் 6நூ. வரலாற்றை ஒப்பிடுகையில் வெறும் சிறு பனுவல் இது...
தாதனார்,செம்பூரானங்கள் போன்ற பல வகையறாக்கள் இவர்களின் உரிமையை பிடுங்கி சீர்திருத்தம் என்ற பெயரில் சீர்குலைக்கும் ஆங்கிலேயர்கள்.
காவலர்களை கன்னம்காரர்களாக மாற்றி அவர்களை சுட்டுக்கொள்ளும் அவலம்.இதற்கிடையில் ஊரின் அழகியலும் மக்களின் பண்பாடும் வளமான மொழிநடையோடு பல தகவல்கள் கொட்டிக்கிடக்கும் புதினம் இப்பனுவல்.
சு.வெங்கடேசன் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்...👏👏👏
சில காட்சிகள்: எனக்கு பிடித்தமானவை
ஊர் பெரியவரான பராக்கிரம வீரம் கொண்ட மனிதர், இருவது முப்பது பேர் சுத்திநின்னு குத்திப்போட்டாலும் இரண்டே நாள்ல சிகிச்சை பாத்துகிட்டு எந்திருச்சு நடக்குற மனுசன் வெறும் இத்துண்டு துப்பாக்கி குண்டுக்கு ஒட்டு மொத்தமா சாஞ்சிட்டானே செத்து...என்று ஒன்றும் புரியாமல் வேடிக்கை பார்க்கும் ஊர் மக்களின் அறியாமை....
கன்னம் போட சென்ற இடத்தில் பாம்பு கடித்தால் விஷப்பாம்பா இல்லை விஷமற்றதா என்பதை கண்டுணரும் சாதூர்யம்.
தெரியாமல், கன்று ஈனுப்போகும் பசுவை கன்னம் போட்டுவிடுகின்றனர்.கன்னம்கார்கள் வேறெங்கோ சென்ற சமையத்தில் பசு , கன்று ஈன்று அந்த கன்று வழிதவறி சென்றுவிட தனது கன்றுகுட்டிக்காக பசுவின் தாய்மை குரல் ஒலிக்கிறது....பசுவுக்கு சொந்தக்காரன் அந்த பசுவைத்தான் தேடுகிறான் ஆனால் இந்த ஒட்டுமொத்த கன்னம்காரர்களின் ஊரும் அந்த கன்றை தேடி அலைகிறது....
இன்னும் பல அற்புதமான காட்சிகள் ஆழகியல் கலந்த மக்களின் வாழ்வோட்டங்கள்....
நன்றி :
திரு திவாகர் குமார்,
வாசிப்பை தேசிப்போம்,
முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக