8 பிப்., 2023

கேள்வி மேடை

உகாண்டா அரசு Educational Strategic Investment Planning எனும் திட்டத்தை செயல் படுத்தி வருகிறது. உகாண்டாவில் பள்ளி நூலகங்களுக்கு புத்தகம் வாங்குவதற்கு ஒரு விதியை அரசு அறிவித்துள்ளது. ஒரு மாணவருக்கு ஆண்டு தோறும் பத்து புத்தகங்கள் வாங்கி வைக்கவேண்டும். உதாரமாக உங்கள் பள்ளியில் படிக்கும் மொத்த மாணவர்கள் 200 பேர் என்றால், குறைந்த பட்சம் 2,000 புத்தகங்கள் ஒவ்வொரு வருடமும் சேரவேண்டும். இது குறைந்த பட்சம். அதிகமாக அவரவர் விருப்பப்படி வாங்கலாம். நமது பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் நூலகம் செல்கிறார்கள்? புத்தகம் படிக்கிறார்கள்? எந்த மாதிரி புத்தகங்கள் படிக்கிறார்கள்? மாணவர்களை விடுங்கள், ஆசிரியர்கள்  நிலை என்ன?

நன்றி :
திரு சுப்பையா அருணாச்சலம் 

கருத்துகள் இல்லை: