(நீண்ட இடைவெளிக்குப் பின் சூரியின் நாட்குறிப்பைத் தொடர்கிறேன். சூரியின் டைரியாக 66 பதிவுகள் வந்து, அது பின்னர் சூரியின் நாட்குறிப்பாக மாற்றம் பெற்று, ஒரு பதிவுடன் நின்றுபோய், தற்போது மறுபடியும் தொடர்கிறது. ஆகவே அந்த வரிசையில் 68வது பதிவு. குழப்பங்களுக்கும், இடைநிறுத்தத்திற்கும் உங்களது மன்னிப்பை வேண்டுகிறேன்)
.....
"கண்ணேறு"
அன்புகூர்ந்து இதைப் படித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை பதிவிட வேண்டுகிறேன்.
நன்றி, வணக்கம்.
அன்புடன்,
உங்கள் சூரி
🏘🏘🏘🏘🏘🏘🏘🏘🏘🏘🏘
*கண்ணேறு*
-------------------------
கண்ணேறு, கண் திருஷ்டி, கண்ணடி என்றும் ஆங்கிலத்தில் evil eye என்றும் பேச நாம் அனைவருமே கேட்டிருப்போம். இந்தக் கண்ணோட்டம் உலகளாவியது என்று நினைக்கத் தோன்றுகிறது. மூட நம்பிககை என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.
ஹோமியோபதி மருத்துவம் பயிலுகையில் அஸாரம் யூரோப்பியம் (Asarum Europeum) என்ற மருந்தின் சிறப்பியல்பாக கண்ணேறு சொல்லப்பட்டது.
இன்னும் சொல்லப்போனால் அனுபவக் குறிப்புகளிலும் இந்த மருந்தை பயன்படுத்தி வெற்றி கண்டது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
நான் படித்த சுவாரஸ்யமான இரு அனுபவக் குறிப்புகளை உங்களிடம் இங்கே பகிர்ந்தளிக்க விரும்புகிறேன்.
செழிப்பாக, ஆரோக்கியமாக வளர்ந்து, நன்றாகப் பால் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு பசு ஒன்று, ஒரு நபரின் கண்ணேறுபட, (அடேயப்பா! எப்படி கொழுத்திருக்கு!! இவ்வளவு பால் கொடுக்குது!!!), அடுத்த சில நாட்களில் இளைக்க ஆரம்பித்து, நோய்வாய்ப்பட்டு, மெலிந்து கொண்டே போனது. பால் கொடுப்பதும் வெகுவாகக் குறைந்துவிட்டது. தற்செயலாக இதை அறிந்த ஹோமியோ நண்பர் ஒருவரின் பரிந்துரையில், இந்த மருந்தை நீரில் கரைத்துக் கொடுக்க, படிப்படியாக குணமாகி, இயல்பு நிலையை அடைநதது.
அதுபோல, தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்த, டாக்டர் எஸ்.பி.கோப்பிக்கர், மருத்துவம் பயின்று கொண்டிருந்த காலத்தில் நடந்ததை பதிவு செய்திருக்கிறார். அவரது சகோதரியின் ரொம்ப சூட்டிகையான பெண் குழந்தை, அருமையாகப் பேசும், பாடும். விருந்தினர் ஒருவரின் கண்ணேறுபட, (என்னா அழகு! என்னமா பாடுறா!!), அடுத்த நாளிலிருந்து பேசவே முடியாமல் போனது. பல மருத்துவர்கள் முயன்றும் என்ன பிரச்சினை என்பதையே கண்டுபிடிக்க முயலவில்லை, புரிந்துகொள்ளவும் முடியவில்லை, குணப்படுத்தவும் முடியவில்லை.
அப்போது கோப்பிக்கர் ஒரு மருந்து என்னிடம் இருக்கிறது, கொடுக்கட்டுமா என்று கேட்டு, கொடுத்திருக்கிறார். விரைவில் குணமாகி, இயல்புநிலையை அடைந்தது அந்தக் குழந்தை.
நிலக்கடம்பு எனும் தாவரத்திலிருந்து (ஆங்கிலத்தில் EUROPEAN SNAKE ROOT) தயாரிக்கப்படும் இம்மருந்து என்னை பெரிதும் வியக்க வைத்தது.
இந்த மருந்திற்கு வேறு பல சிறப்புக் குணங்களும் உண்டு. நோயாளரால் கீச்சுக்கீச்சு சத்தத்தை தாங்கிக் கொள்ள முடியாது. மதுவகைகள் மீது சொல்லொணாக் காதல். ரஷ்யாவில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு பெரிதும் கொடுக்கப்படுவது.
நம்மால் புரிந்துகொள்ள முடியாத பல விஷயங்களை நாம் மூட நம்பிக்கைகள் என்று மறுபபது எல்லாத்தருணங்களிலும் சரியாக இருப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் நவீன அறிவியலால் புரிந்துகொள்ள முடியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. ஒருநாள் அவை புரிந்துகொள்ளப் படலாம்.
பல ஹோமியோபதி மருத்துவர்கள்கூட இந்த மருந்தின் இந்த சிறப்பியல்பைப் பற்றி அறியாதிருக்கலாம்
அனைவரும் பயன்பெறவே இதைப் பதிவிடுகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக