6 அக்., 2020

காந்திய சிந்தனைகள் - திரு.KR.அதியமான்

https://m.facebook.com/story.php?story_fbid=10204780956665734&id=1292381273

காந்தியத்தின் முக்கிய கூறுகள் அகிம்சை, சத்தியம், சேவை என்று பொதுவாக புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால் நடைமுறை செயல்பாடு என்பதும் மிக முக்கிய அம்சம் : means Vs ends எனப்படும் நோக்கங்களும் வழிமுறைகளும். நோக்கம் எத்தனை மகத்தானதாக இருந்தாலும், அதை அடைய வேண்டிய வழிமுறைகளே நோக்கத்தை விட முக்கியமானது. இறுதி லட்சியத்தை அடைய எதை வேண்டுமானாலும் செய்வதில் உடன்பாடில்லாதாத கொள்கை. இதை காந்தி தன் செயல்பாடுகளில், போராட்டங்களின் வடிவங்களை தீரமானிப்பதில், முக்கியமாக போராட்டங்களை திரும்ப பெறுதலில் நிறுவினார்.

காந்தி பற்றி சில் மாயைகள் : 

1.பகத் சிங் மற்றும் இதர போராளிகளின் மரண தண்டனையை அவர் தடுக்க தவறினார். இல்லை. இயன்ற மட்டும் தடுக்க முயன்று தோற்றார். வைஸ்ராய்க்கு அவர் எழுதிய கடிதம் : http://www.mkgandhi.org/faq/q26.htm

2. 1932 புனா ஒப்பந்தம் : தலித்துகளுக்கு தேர்தலில் இரட்டை வாக்குரிமை முறையை தான் எதிர்த்தார். அதற்க்கு பதிலாக இன்றளவும் நிலவும் தனி தொகுதி முறையை முன் மொழிந்தார். method of reservations for dalits இல் தான் அம்பேத்காருடன் முரண்பாடு. ஒதுக்கீடே கூடாது என்ற நிலைபாடு எடுக்கவில்லை. 1948இல் காந்த கொல்லப்பட்ட பின், உருவான இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராக அம்பேத்கார் செயல்ப்பட்ட போது, 1932இல் காந்தி முன்மொழிந்த பாணியை மாற்றி, தான் முன்மொழிந்த இரட்டை வாக்குரிமை முறையை கொண்டு வர முயலவில்லை என்பதை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

3. வர்ணாசிரம், சாதி அமைப்பு பற்றிய அவரின் பார்வைகள் படிப்படியாக மாறின. 1910இல் அவர் கொண்டிருந்த பார்வை, 30களில் மாறின. கலப்பு திருமணத்தை மிக ஆதரித்து முன்மொழிய துவங்கினார். இறுக்கமான சாதி அமைப்பு அப்படியே தொடர வேண்டும் என்று கருதவில்லை. அவரின் முந்தைய கருத்துகளை மட்டும் பிடித்து கொண்டு தொங்குபவர்கள், காங்கிரஸ் பேரியக்கத்தை தீண்டாமை ஒழிப்பு, தலித் மேம்பாடு பற்றி உறுதியாக நகர்த்திய சாதனையையும் பார்க்க வேண்டும். அவரது ஆசரமங்களில் தலித்கள் உள்ளிட்ட அனைத்து சாதி, மத உறுப்பினர்கள் சேர்ந்து சமமாக கூடி வாழ்ந்தனர். கக்கூஸ்களை அனைவரும் சுத்தம் செய்தனர்.  இன்று வரை வேறு எந்த தலைவரும் முன்னெடுக்காத அரிய செயல் இது.

நன்றி :

திரு.KR.அதியமான் 

கருத்துகள் இல்லை: