17 பிப்., 2021

இன்றைய குறள்

குறள் : 778
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்

மு.வ உரை :
போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர்  அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர்.

கலைஞர் உரை :
தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்.

சாலமன் பாப்பையா உரை :
போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர், அப்போரை வேண்டா என்று அரசு சினந்து தடுத்தாலும், தம் வீரத்தில் குறைய மாட்டார்.

Kural 778
Urinuyir Anjaa Maravar Iraivan
Serinum Seerkundral Ilar

Explanation :
The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour  even if the king prohibits (their fighting).
💐

கருத்துகள் இல்லை: