என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
26 செப்., 2025
இன்றைய புத்தகம்
பேராசிரியர் சி. மௌனகுரு எழுதிய "பண்டைத் தமிழர் வரலாறும் இலக்கியமும்" என்ற நூல், பண்டைத் தமிழர்களின் வரலாற்றையும் இலக்கியத்தையும் ஆராயும் ஒரு முக்கியமான தமிழ் ஆய்வு நூல் ஆகும். அரசர்களின் வரலாற்றோடு சமூக வரலாற்றையும் இணைத்து, சங்க கால இலக்கியங்கள் குறித்த மீள்பார்வையை முன்வைத்து, பெண்களின் நிலை, சோழர் கால சமூக அமைப்பு போன்ற பல்வேறு கோணங்களில் நூல் ஆராய்கிறது.
நூலின் முக்கிய அம்சங்கள்:
சமூக வரலாறு:
வழக்கமான அரச வரலாறு என்பதைத் தாண்டி, சமூக வரலாற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சமூக வரலாற்றாகக் கட்டமைக்க வேண்டிய தேவையை இந்த நூல் பேசுகிறது.
சங்க இலக்கியம்:
சங்க காலம் மற்றும் சங்க இலக்கியங்கள் குறித்த ஒரு மீள்பார்வையை நூல் முன்வைக்கிறது.
பல்வேறு ஆய்வுகள்:
பல்வேறு ஆய்வாளர்களின் கட்டுரைகளையும், வரலாற்றோடு இலக்கியத்தையும் இணைக்கும் பார்வைகளையும் உள்ளடக்கி உள்ளது.
பண்பாட்டு கூறுகள்:
ஈழத்தில் வாழும் மக்களின் வரலாறு, அந்நாட்டின் கூத்துகள் மற்றும் பண்பாடு குறித்தும் நூல் விவாதிக்கிறது.
ஆசிரியர்:
இந்த நூலின் ஆசிரியர், புகழ்பெற்ற தமிழ் ஆய்வாளரும், பேராசிரியர் கல்வியாளருமான சி. மௌனகுரு ஆவார்.
நூலின் நோக்கம்:
பண்டைத் தமிழர்களின் வரலாற்றை வெறும் நிகழ்வுகளாகக் காட்டாமல், அவர்களின் பண்பாடு, கலை, இலக்கியம், சமூக அமைப்பு போன்றவற்றையும் சேர்த்து ஆராய்வதே இந்த நூலின் முக்கிய நோக்கம்.
25 செப்., 2025
24 செப்., 2025
23 செப்., 2025
இன்றைய புத்தகம்
வரலாற்றில் இடம்பெற்று, வரலாறாகத் திகழ்ந்துகொண்டிருக்கும் இடங்கள் பல உள்ளன. ஆனால் அந்த இடங்களெல்லாம் வெறும் காட்சிப் பொருளாகவே இருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள ஒரு வரலாற்று இடம், இரண்டு நூற்றாண்டுகளாக நீண்ட வரலாற்றைத் தாங்கிக்கொண்டு கோடிக்கணக்கான மக்களுக்கு இன்றும் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆமாம். அதுதான் முல்லைப் பெரியாறு அணை. பென்னிகுக் எனும் பெரும் மனிதம் கொண்ட மாமனிதனின் விடா முயற்சியாலும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் கடும் உழைப்பாலும் உருவான முல்லைப் பெரியாறு அணை கட்டுமானம், சாதாரணமாக நிகழ்ந்துவிட்ட ஒன்றல்ல என்பதை எழுத்தாளர் அ.வெண்ணிலா தன் விறுவிறு எழுத்தால் விவரித்து ஆனந்த விகடனில் 122 வாரங்கள் எழுதினார். ஒரு தொடர் இவ்வளவு நீண்ட நாள் எழுதப்பட்டதிலிருந்தே, அந்தத் தொடருக்கு வாசகர்களின் வரவேற்பு எப்படியிருந்தது என்பது புலனாகும். திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கும் சென்னை மாகாணத்துக்கும் இடையே அணை கட்டுமான ஒப்பந்தம் ஏற்படும் முன்பே, இருந்த சிக்கல்கள், நிபந்தனைகளில் ஆரம்பித்து, அணை கட்டுமானம் முடிப்பது வரை மிக விரிவாகவும் அழகாகவும் விவரித்து பெரும் வரலாற்றுப் புதினமாகத் தந்திருக்கிறார் எழுத்தாளர் அ.வெண்ணிலா. 150 ஆண்டுகளுக்கு முன் மிக உயர்ந்த மலைமேல் கட்டப்படும் அணைக்கு கட்டுமானப் பொருள்களை எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட சிரமங்கள், காலரா நோய் பரவி தொழிலாளர் பலரைப் பலிவாங்கிய துயரம், காட்டு மிருகங்களின் அச்சுறுத்தல், இயற்கை இடர்ப்பாடுகள் என பல இன்னல்களுக்கிடையே நடைபெற்ற பெரியாறு அணையின் கட்டுமானப் பணி எத்துணை சவால் நிறைந்தது என்பதை வாசகர்களின் கண் முன்னே நிறுத்துகிறது இந்த நீரதிகாரம். ‘முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் பென்னிகுக்' என அந்த அணை பற்றி சில வார்த்தைகளிலேயே அறியப்பட்டிருந்தது. ஆனால், அணை கட்டுமுன் இருந்த சிக்கல்களையும் அணை கட்டு மானத்தின்போது நடந்த துயரங்களையும், பெரும் முயற்சிகளையும் சொல்லிக்கொண்டு பெரும் வரலாறாகப் பாய்ந்து செல்கிறது இந்த நீரதிகாரம்!
21 செப்., 2025
இன்று சில தகவல்கள்
42 வகை பாவங்கள்...
1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.
2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.
3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது.
4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.
5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.
6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.
7. ஏழைகள் வயிறு எரியச்செய்வது.
8. தருமம் பாராது தண்டிப்பது.
9. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது.
10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது.
11. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது.
12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.
13. ஆசை காட்டி மோசம் செய்வது.
14. போக்குவரவு கூடிய வழியை அடைப்பது.
15. வேலை வாங்கிக்கொண்டு குறைப்பது.
16. பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.
17. இரப்பவர்க்குப் பிச்சை இல்லை என்பது.
18. கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது.
19. நட்டாற்றில் கை நழுவுவது.
20. கலங்கி ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது
21. கற்பிழந்தவளோடு கலந்துறைவது.
22. காவல் கொண்ட கன்னியை கற்*ழிப்பது.
23. கணவன் வழி நிற்பவளைக் கற்*ழிப்பது.
24. கருவைக் கலைப்பது.
25. குருவை வணங்கக் கூசி நிற்பது.
26. குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.
27. கற்றவர் தம்மிடம் கடுகடுப்போடு நடப்பது.
28. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.
29. கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது.
30. ஊன் சுவை (மாமிசம்) உண்டு உடல் வளர்ப்பது.
31. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.
32. அன்புடையவர்க்குத் துன்பம் செய்வது.
33. குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது.
34. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.
35. பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.
36. பொது மண்டபத்தைப் போய் இடிப்பது.
37. ஆலயக் கதவை அடைத்து வைப்பது.
38. சிவனடியாரைச் சீறி வைவது.
39. தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.
40. சுத்த ஞானிகளைத் தூஷணம் செய்வது.
41. தந்தை தாய் மொழியைக் (அறிவுரைகளை) தள்ளி நடப்பது.
42. தெய்வத்தை இகழ்ந்து செருக்கூறுவது.
வள்ளலார் அருளியது🦚🌹🦚.
20 செப்., 2025
இன்றைய புத்தகம்
1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியிருக்கிறேன்.எனது மேன்மைகள் என்று நான் கொரிபிடுபவற்றை நான் பயத்துடனே குறிப்பிட்டுள்ளேன்.ஒரு பெரிய அரசியல் தலைவனின் வரலாறும் அல்ல இது,ஒரு பெரிய கவிஞனின் வாழகையுமல்ல.வாழ்கை வலி போக்கன் ஒருவனின் உயர்வு தாழ்வுகளே இந்நூல். ஏனென்றால்,என் காலத்துக்கு பிறகு இது ஓர் அதிசயமாக இருக்கும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கையுண்டு.-கண்ணதாசன வனவாசம்´ என்பது, கண்ணதாசனின் சுயசரிதை. அவர் வாழ்க்கையில் நடந்தையெல்லாம் அருமையாக எடுத்துச் சொல்லியிருப்பார். அதில் தான் அண்ணா, கருணாவின் நடத்தைகளையெல்லாம் புட்டுபுட்டு வைத்திருப்பார். வேறு யாராவது எழுதி இருந்தால் அச்செய்திக்கு முக்கியத்துவம் வந்திருக்காது. ´கிசு கிசு´ போல் பலவீனமாகி இருந்திருக்கும். ஆனால், கண்ணதாசன் தி.மு.க தலைவர்களின் நடத்தையை அம்பலப்படுத்திய போது சம்பந்தப்பட்டவர்களே வாயை திறக்கவில்லை என்பதோடு, கண்ணதாசன் தன்னுடைய நடத்தைகள் குறித்தும் பகிரங்கமாகவே எழுதியிருக்கிறார் கண்ணதாசனின் தனிப்பட்ட வாழ்க்கை கட்டுப்பாடற்றது. மனித பலவீனங்களுக்கு சாட்சியாக விளங்குவது. அதை அவரே தனது சுயசரிதையில் கூறி இருக்கிறார். '' நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படி வாழாதீர்கள்; நான் கூறியபடி வாழுங்கள்'' என்பதே கண்ணதாசனின் சுயபிரகடனம்."
19 செப்., 2025
18 செப்., 2025
இன்றைய புத்தகம்
காலச்சுவடு புதிய வெளியீடு
பசியாறும் மேஜையில்
காலையுணவு என்பது துருக்கிய விருந்தோம்பும் பண்பாட்டின் முக்கிய அம்சம். காலையுணவு நேரத்தில் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் உணவு மேஜையில் ஒன்றிணைவது மரபு. நவீன வாழ்வின் பரபரப்புக்கு நேரெதிரான விதத்தில் நிதானமாக, உரையாடியபடியே ருசித்துச் சாப்பிடுவார்கள்.
இஸ்தான்புல் அருகேயிருக்கும் துருக்கித் தீவு பியூக்கதா. அங்கே வசிக்கும் ஷிரீன் ஸாகா பிரபல பெண் ஓவியர். இவருடைய நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ரமலான் விடுமுறை நாளின்போது பேரன், பேத்தி, கொள்ளுப் பேத்தி ஆகியோர் கூடுகிறார்கள். பத்திரிகையாளன் புராக் காலையுணவுக்கு விருந்தினனாக அழைக்கப்படுகிறான். இந்த வைபவத்தின்போது காலையுணவு மேஜையில் நடக்கும் நிகழ்வுகளே நாவலின் மையக்கரு.
ஷிரீன் ஸாகாவின் பிறப்பில் இருக்கும் மர்மம் இந்த உணவறையில் முடிச்சவிழ்கிறது. ஷிரீன் ஸாகாவின் வாழ்க்கையில் பொதிந்திருக்கும் மர்மத்தை அவிழ்க்கும் சாக்கில் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கும் நாட்டின் அவல வரலாற்றை இந்நாவல் சுட்டிக்காட்டுகிறது.
நூலைப் பெற:
காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/PasiyaarumMejaiyil_1610/
அமேசானில் வாங்க :
https://www.amazon.in/dp/B0FQP8JQNY
@followers @highlight D.i. Aravindan Kannan Sundaram
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பற்றிய அற்புதமான, கேட்கக் கேட்க தெவிட்டாத இனிய நல்லுரை.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பற்றிய அற்புதமான, கேட்கக் கேட்க தெவிட்டாத இனிய நல்லுரை.. கேட்டு மகிழுங்கள்!
உரலி:
https://youtu.be/xHWpHK8qUgI?si=Q-X0n_wLeP5RcSyP
திரு பாரதி கிருஷ்ணகுமார் அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
நன்றி:
Shruti.tv
YouTube
17 செப்., 2025
16 செப்., 2025
15 செப்., 2025
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)