20 மார்., 2022

பயனுள்ள குறிப்புகள்

உலக மகிழ்ச்சி தின நல்வாழ்த்துக்கள்

கோபுர தரிசனம்

இன்றைய குறள்

உலக சிட்டுக்குருவி தின நல்வாழ்த்துக்கள்

நெல்லை புத்தகத் திருவிழா

14 மார்., 2022

சிரிக்கவும் சிந்திக்கவும்

விழிப்புணர்வு பக்கம்

இன்று ஒரு தகவல்

ஆன்மீக சிந்தனை

நூல் மயம்

முகநூல் சிறுநீர் சிகிச்சை அன்பர்கள் குழு

முகநூலில் 
சிறுநீர் சிகிச்சை அன்பர்கள் குழு
அனைவரையும் அன்புடன்
அழைக்கிறது 

காரைக்குடி புத்தகத் திருவிழா

சிரித்து வாழவேண்டும்!

அன்றாட வாழ்வில் அபாயங்கள்

இன்றைய சிந்தனைக்கு

இன்றைய குறள்

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

இன்று ஒரு தகவல்

குட்டிக்கதை

🙌🙏ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப்போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும் புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது.

🙌நல்லாத்தான் போய்கிட்டு இருந்தது நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு 😏எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கிற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனீயை கொண்டு வந்தது. 

🙌அந்த தேனீயும் வேலையில் ஒரு புலிதான் போல பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி ( இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனீ சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வேணுமுனு கேட்டுச்சு  

🙌புலிக்கு ஏக சந்தோஷம் இந்த தேனீ என்னமா யோசிக்குது நமக்கு இவ்வளவுநாளா இது தோனலையேன்னு ஒரு முயலை செக்ரட்டரியாக்குச்சு. அத்தோட புலியார் நமக்கும் கொஞ்சம் தெரியும்னு காட்டிக்க, "ஆள் போட்டாச்சு இனிமே எனக்கு தினமும் வேலை முன்னேற்றம் குறித்து ரிப்போர்ட் வரைபடமாவும் அட்டவனையாவும் கொடுக்கனும்" என்று சொல்லுச்சு  

"ஓகே பாஸ் அதுக்கென்ன, பிரமாதமா செஞ்சிடலாம் அதுக்கு ஒரு கம்ப்யூட்டர், பிரின்டர், புராஜக்டர் எல்லாம் வேணுமே"ன்னது, அப்படியே வாங்கிகிச்சு ஒரு கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்டும் பூனை ஒன்றின் தலைமையில் அமைச்சாச்சு.

🙌இப்போ ஏகப்பட்ட கெடுபிடி நெருக்கடிகளால் விரக்தியடைந்த அந்த எறும்போட வேலையில் ஒரு தொய்வு வந்துச்சு உற்பத்தி குறைந்தது. புலி நினைச்சுது எல்லாம் சரியா இருந்தும் ஏன் இப்படி? தேனியோட ஐடியாக்களை எறும்புக்கு விளக்கமா எடுத்துச்சொல்ல ஒரு தொழில்நுட்ப ஆலோசகரை போடுவோம்னு ஒரு குரங்குக்கு அந்த வேலையை கொடுத்தது. ஏற்கனவே டல்லான எறும்பை இப்போது குரங்கும் அதன் பங்குக்கு குழப்ப அன்றய தினத்துக்காக திட்டமிடப்பட்ட வேலைகளை அன்றைக்கே முடிக்காமல் போனது எறும்பு. மேலும் உற்பத்தி குறைவு நஷ்டத்தில் இயங்கியது .😟

🙌'எதைத்தான் தின்னா பித்தம் தெளியும்' என்ற மனநிலைக்கு ஆளான புலியார் நஷ்டத்தை சரி செய்ய என்ன செய்லாம்னு ஆராய ஆந்தையை நியமிச்சது. ஆந்தை மூன்று மாத ஆராய்ச்சிக்கு பின் கடைசியா இப்படி சொன்னது. "தொழிற்சாலையில் தேவைக்கு அதிகமா ஆள் இருப்பதே காரணம் யாரையாவது வேலையை விட்டு எடுத்துட்டா நிலைமை ஓரளவு சீராகும்"

"யாரை எடுக்கலாம் அதையும் நீயே சொல்லிடு" என்றது புலி. "அதிலென்ன சந்தேகம் சரியாக வேலை செய்யாத அந்த எறும்பைதானே" அதிரடியாக சொன்னது ஆந்தை.

🙌இப்படித்தான் உலகெங்கும் பொதுத்துறை மற்றும் தனியார்துறைகளில் எதுவும் செய்யாமலே படம் காட்டுபவனும் ஜால்ரா அடிப்பவனும் திருட்டு தனம் செய்பவனும் வெறும் வாயால் வேலை செய்பவனும் பிழைத்துக் கொள்கிறான். வேறெதுவும் தெரியாது  வேலையை மட்டுமே செய்பவன் பாதிப்புக்கு உள்ளாகிறான்.

*படித்ததில்_பிடித்தது.

12 மார்., 2022

நெல்லையப்பன் கவிதைகள் : அரசியல் பிழைத்தோர்

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

நலக்குறிப்புகள்

இன்று ஒரு தகவல்

குட்டிக்கதை

இன்று ஒரு கதை. எங்க வீட்டுத் தோட்டத்தில் ஒரு மாமரத்தில் ஒரு காக்கை கூடு கட்டி முட்டைகளிட்டிருந்தது.காகம் இரை தேடி போனபோது ஒரு கழுகு கூட்டில் நுழைந்து காக்கா முட்டைகளை கொத்திக் குடித்து விட்டு  வெளியேறி  யது. அந்த தருணத்தில் வந்த தாய் காகம் இழப்பை உணர் ந்து கழுகின் பிடறி யில் தொத்திக் கொத்தியது.கழுகு கண்டு கொள்ளாது உயரப்பறந்தது. காகமும் கழுகின் மீதமர்ந்து  கொத் திக் கொண்டே கழுகோடு பறந் தது. கழுகு தாங் கிக் கொண்டே உயரஉயர பறந்தது. காகத் தின் பறப்பு எல்லையைக் கடந்ததும்  கழுகு பிடறியை சிலிர் த்து உதறியது. காகம் மேலிருந்து அதிர்ந்து கீழே குற்றுயிராய் விழுந்தது.பிற காகங்கள் கூடி கரைந்தன.நீ  ஒத்தையாக பறக்கும் போதே நாங்களும் சேர்ந்து கழுகை தாக்கி இருந்தால் அந்தக் கழுகை வீழ்த்தி இருக்கலாம்.உனக்கும் ஆபத்து நேர்ந்திருக்காது. கழுகுகளுக்கும் படமாக இருந்திருக்கும் என்று புலம்பின. புலம்புகின்றன என்றும் சேர்த்துக் கொள்ளலாம்.

நன்றி :
கவிஞர் ஜனநேசன் 

2 மார்., 2022

சிரித்து வாழவேண்டும்

நூல்மயம்

நலக்குறிப்புகள்

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

இன்றைய குறள்