30 மே, 2022

குட்டிக்கதை

ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்..🌴🌴🌴

அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது.🌿🌿🌿🌿🌿

வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ....

ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை 🌲🌲🌲🌲🌲
நடந்து சென்றே...

ரெகுலராக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம் 🍀🍀

முருங்கை காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக
அரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்! 🍀🍀🍀

ராமசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்! 🌲🌲🌲

இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம்
சம்பாதித்து விடுவார்!

பல வருடமாக ராமசாமி முருங்கைக்காய் கொண்டுவருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை; 🌴🌴🌴

ராமசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார்!

காரணம்
ராமசாமியின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது! 🌴🌴🌴

ஒரு நாள் ராமசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார்....

சிறிது நேரத்தில் 🍀🍀🍀🌴
பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க... அவருக்காக மளிகைக்காரர் ...
எடைபோட... அதில் ஒன்பது கிலோ
மட்டுமே இருந்தது!....🌲🌲🌲🌲

அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! 🍀🍀ராமசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம்,
இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே!

இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள்தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே!!😣😣

அடுத்த முறை ராமசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார்! 💐💐

நான்கு நாட்கள் கழித்து ராமசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார்! 🌴🌴

நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார்! 👍👍

"கையும் களவுமாக பிடிக்கவேண்டும்என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க பத்து கிலோ என்றார் ராமசாமி.. 🌳🌴

அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒன்பது கிலோ தான் இருந்தது. 🌴

வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என ராமசாமியின் கன்னத்தில் அறைந்தார்! 💐💐

இத்தனை வருஷமா இப்படித்தான் ஏமாத்திட்டு இருக்கியா? 👌 கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன்,

இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய் என துப்ப, நிலைகுலைந்து போனார் ராமசாமி. 🌴🌴🌴

அய்யா...என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க..

ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டுவருவேன்.

"இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ, 🌴🌲🍀🌴🌴
மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது....

"தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார்! 💐💐

இத்தனை வருடங்களாக ராமசாமியை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும்...

அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது! 🌴🌲🌸

இது தான் உலகநியதி!

நாம் எதை தருகிறோமோ ↪
அதுதான் நமக்கு திரும்ப வரும் ....↩
நல்லதை தந்தால் நல்லது வரும்,...🌴🌴

தீமையை தந்தால் தீமை வரும்! 🌴🌴

வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம்,
ஆனா.... 🌴🌲🌳
நிச்சயம் வரும்!

ஆகவே #நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம்!! 🌴

மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்." 🌴🌴🌴

29 மே, 2022

நலக்குறிப்புகள்

குட்டிக்கதை

*படித்ததில் பிடித்தது...*

ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றார். 

அவரை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்ற பின்பு நாம் வாங்கிக் கொள்வோம் என்று தள்ளி நின்றான். நேரம் போய்க்கொண்டே இருந்தது. இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள். சிலர் அன்னதானம் பெற்றுக் கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்து விட்டுப் போனார்கள்.

இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம். எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? எவ்வளவு போராட்டம்?  எவ்வளவு இழிசொல்? போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ இப்படி தவிக்கிறோமே? என்று தன் விதியை நொந்து கொண்டான். மாலை வரை காத்திருந்து காத்திருந்து, சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல *"அப்பனே ஆண்டவா...என்னை ஏனப்பா இப்படி ஒரு இழி பிறவியில் பிறக்கச் செய்தாய்"* என்று *கோபுரத்தை பார்த்து* மனதில் உள்ள தன் குமுறலைச் சொல்லி, கோவில் அருகே உள்ள குளத்தங்கரையில் அமர்ந்தான். குளத்து நீரை கையில் எடுத்து முகத்தை கழுவி, படியில் சோர்வாக அமர்ந்தான்.

ராஜா அன்னதானம் கொடுத்து முடித்து, அந்த படித்துறையில் காலாற நடந்து வந்தார். *"என்னப்பா...சாப்பிட்டாயா?"* என்று ஒரு பத்தடி தூரத்திலிருந்து குளத்தில் தன் முகத்ததை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஏழையிடம் கேட்டார். கேட்பது ராஜா என்று தெரியாமல் *"ஊரே சாப்பிட்டது..என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல அய்யா"* என்று விரக்தியாக, முகத்தை திருப்பாமல் குளத்து நீரை பார்த்தபடியே பதில் சொன்னார் அந்த ஏழை.

அவன் சொன்ன பதில் ராஜாவின் மனதை உருக்கியது. என் பிறந்தநாளில் ஊர் மக்கள் யாரும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது என்றுதானே அன்னதானம் ஏற்பாடு செய்தோம்? ஒரு அப்பாவி ஏழை இப்படி விடுபட்டுள்ளானே என்று அவன் அருகில் சென்று அவன் தோளில் கை வைத்து *"மன்னித்து விடப்பா...ரொம்ப பசிக்கிறதா உனக்கு?"* என்று கேட்க.

குளத்து நீரில் தலையில் கிரீடம், காதல் குண்டலம், நெற்றியில் திருநீர், முகத்தில் வாஞ்சை என்று ராஜா தெரிய திடுக்கிட்டு எழுந்தான். *"ராஜா...நீங்கள் என்று தெரியாமல் அமர்ந்து கொண்டே பதில் சொல்லிவிட்டேன்...என்னை மன்னிக்க வேண்டுகிறேன்"* என்று பதறினான். இவனின் பண்பை பார்த்த ராஜா சத்தமாக சிரித்தார். *"வா...இன்று நீ என்னோடும் ராணியோடும் விருந்து உண்ணப்போகிறாய்"* என்று அவனை பேசவிடாமல் இழுத்துச் சென்று அவரின் தேரில் ஏற்றிக்கொண்டு, அரண்மனைக்கு விரைந்தார். *"போய் குளித்துவிட்டு வா"* என்று தனக்கென்று வாங்கி வைத்திருந்த புதிய ஆடைகளில் ஒன்றை அவனுக்கு கொடுத்தார். குளித்து, புத்தாடை அணிந்து வந்தார். அறுசுவை விருந்து கொடுத்தார். சாப்பிட்டு முடித்து அவன் கையில் ஒரு குடம் நிறைய பொற்காசுகளை கொடுத்தார் *"இன்றிலிருந்து நீ ஏழை இல்லை...இந்த பணத்தை வைத்து நீ விரும்பும் தொழிலை நேர்மையாக செய்து கௌரவமாக வாழ்"* என்று வாழ்த்தினார்.

அதுவரை அமைதியாக இருந்த ஏழையின் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. *"ஏனப்பா அழுகிறாய்?"* என்று ராஜா கேட்க. *"நான் இதுநாள் வரை  பிறவி ஏழை என்று மட்டும்தான் நினைத்திருந்தேன் ராஜா...இந்தத் தருணம்தான் நான் ஒரு பிறவி முட்டாள் என்று புரிந்துகொண்டேன்"* என்று சொன்னான். ராஜா ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று கேட்க *"வாழ்க்கையில் இன்று தான் முதல் முறையாக கோபுரத்தை பார்த்து என்னை ஏன் இப்படி வைத்திருக்கிறாய் என்று ஆண்டவனிடம் கேட்டேன்...கேட்ட சில நிமிடங்களில் உங்களை அனுப்பி என் தலையெழுத்தையே மாற்றிவிட்டார்...கடவுளிடம் கேட்டால் நாம் கேட்டதைவிட இன்னும் பல மடங்கு தருவான் என்று இன்று வரை புரியாமல் ஒரு முட்டாளாகத்தானே இருந்துள்ளேன்"* என்று சொல்லி அழுதான்.

*நமக்கு ஒன்று கிடைக்க வில்லை என்றால் சராசரியை விட மிகச் சிறந்த ஒன்றை நமக்காக கடவுள் தரப்போகிறார் என்று நம்புங்கள். நல்லதே நடக்கும்.🙏🌹

28 மே, 2022

நூல்மயம்

இன்றைய குறள்

சிரிக்கவும் சிந்திக்கவும்

குட்டிக்கதை

*இடிவிழுந்த சிவலிங்கம்*

ஒரு ஏழைப்பெண் பூ வியாபாரம் செய்து வந்தாள். பூ கட்டாத தினங்களில் கோயிலுக்கு சந்தனம் அரைத்துக் கொடுப்பது, கோயிலைப் பெருக்கிக் கோலமிடுவது. நந்தவனத்துக்கு நீர் பாய்ச்சுவது போன்ற வேலைகளை அவள் செய்து வந்தாள். (இக்கோவிலின் பெயர் அச்சாளீஸ்வரர் கோவில், நாதனே பொன் மனை மகாதேவர் கோயிலுக்கும் நந்தீஸ்வரத்துக்கும் இடைப்பட்ட கோயில், கன்யாகுமரி மாவட்டம்.) 
அப்பெண்ணுக்கு, கோயிலுக்கு தினமும் வரும் பணக்காரப் பெண் ஒருத்தியோடு தோழமை ஏற்பட்டது. அது கைமாற்றாய் பணம் கேட்குமளவு வளர்ந்தது. ஒரு முறை அந்தப் பணக்கார நங்கையிடம் கொஞ்சம் பெரிய தொகையை வாங்கினாள். ஒரு மாதம் சென்றபின் பணத்தைத் திருப்பிக் கேட்டாள் செல்வவதி. இதோ அதோ என்று சாக்குச் சொல்லி வந்தாள் ஏழைப் பெண். கடன் கொடுத்தவளோ, என் வீட்டாருக்குத் தெரியாமல் நகையை அடகு வைத்து இப்பணத்தைக் கொடுத்தேன். அடுத்த மாதம் என் மைத்துனர் திருமணம். அதற்குள் திருப்பாவிட்டால் என் கணவர் திட்டுவார் கடன் வாங்கும்போதே நம்மால் திரும்பக் கொடுக்க முடியுமா என்று யோசிக்க மாட்டாயா என்று ஏசினாள். ஏழைப் பெண் கலங்கினாள். எல்லோரும் போனபிறகு அச்சாளீஸ்வரர் சன்னிதியில், #ஈஸ்வரா! பணம் வைத்துக் கொண்டா கொடுக்காமல் இருக்கிறேன்! உன்னை நம்பித்தான் பொய் சொல்லப்போகிறேன், தண்டனையாக என்னைப் பழி வாங்கி விடாதே என்று பிரார்த்தித்தாள். அடுத்த நாள் பணக்காரி கடனைக் கேட்டபோது, வீட்டுக்குப் போய் கணக்கு நோட்டைப் பார். உன் கடனை எப்பவோ கொடுத்து விட்டேன் என்று ஒரே போடாகப் போட்டாள் ஏழை. தனவந்தி வாயடைத்துப் போனாள். பிறகு சமாளித்துக்கொண்டு 
அடிப்பாவி! இப்படியா பொய் சொல்லுவே! ஊர் முக்கியஸ்தர்களைக் கூட்டி வருகிறேன். அச்சாளீஸ்வரர் சன்னிதியில் சத்தியம் செய்ய வேண்டும் என்றாள். ஊர் கூடியது. ஏழைப் பெண் கோயிலை வலம் வந்து, அச்சாளீஸ்வரா! கடனைத் தந்து விட்டேன். இது சத்தியம் என்று கற்பூரத்தை அடித்தாள். பலரும் பணக்காரியை இகழ்வாகப் பார்த்தனர். செல்வவதி ஆவேசத்தோடு, அச்சாளீஸ்வரா! ஊரார் முன்பு என்னைப் பொய்யானவளாக்கி விட்டாயே! அசத்தியத்தை ஏற்று மௌனமாயிருக்கும் உன் தலையில் இடி விழட்டும் என சபித்தாள். அப்போது கார் மேகங்கள் கூடின. மழையும், இடியும், மின்னலுமாய் வெளுத்து வாங்கியது. அதில் ஒரு இடி ஸ்வாமி சன்னிதி விமானத்தில் விழுந்தது. லிங்கத் திருமேனியில் பிளவு ஏற்பட்டது. உண்மையை இறைவன் நிரூபித்தான் என்று ஊரார் அதிசயித்தனர். ஊரார் நிதி திரட்டி பணக்கார பக்தையிடம் கொடுக்க, அவள் வீட்டார் அதைக் கோயில் திருப்பணிக்கே தந்து விட்டனர். பிளவு பட்ட லிங்கம் அருகிலுள்ள தடாகத்தில் வைக்கப்பட்டது. கருவறையில் புதிய லிங்கம் ஸ்தாபித்தனர். மறுநாள் கருவறையை திறந்தபோது, அங்கே பிளவுபட்ட லிங்கமே இருந்தது. அபிஷேகம் செய்ய வசதியாக பிளவை மூடிக் கொள் என்று பக்தர்கள் தினமும் பிரார்த்திக்க பிளவு சிறிது சிறிதாகக் குறுகி, தற்போது வடு மட்டுமே தெரிகிறது. புதிதாகச் செய்த லிங்கம் புஷ்கரணியில் உள்ளது. 
“ஆலகாலம் உண்டனை அன்று 
உலகைக் காத்திட 
நீல வானிடி தாங்கினை அபலை துயர் ஓட்டிட,
பால னிவனைத் துரத்திடும் பாப வினைகள் அழிந்திட,
கால காலனே அருள்வாய் அச்சாளீஸ்வர நாதனே”
என்ற பாடலே இருக்கிறது.
சிவ சிவ
திருச்சிற்றம்பலம்

நன்றி :
படித்ததில் பிடித்தது#

17 மே, 2022

கவிதை நேரம்


நன்றி :
முனைவர் சுந்தரம் இளங்கோவன் 

குழந்தைகளுக்கான பயிற்சி முகாம்

இன்றைய குறள்

ஆன்மீக சிந்தனை

இன்று சில தகவல்கள்

️அரசாங்கத்தின் புதிய திட்டம்.....🚑🚑🚑 : Blood On Call

 இன்று முதல், '104' என்பது இந்தியாவில் இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்ணாக இருக்கப் போகிறது.  "Blood On Call" என்பது சேவையின் பெயர்.. இந்த எண்ணை அழைத்த பிறகு, 40kms சுற்றளவில் நான்கு மணி நேரத்திற்குள் இரத்தம் டெலிவரி செய்யப்படும்.. ஒரு பாட்டிலுக்கு ரூ.450/ மற்றும் போக்குவரத்துக்கு ரூ.100.  தயவுசெய்து இந்த செய்தியை அனுப்பவும்.  இந்த வசதி மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும்........

14 மே, 2022

நலக்குறிப்புகள்

உங்கள் கவனத்திற்கு...



🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵
சில நாட்களுக்கு முன் பிரதமர் ஒரு சம்மேளனத்தில்
பேசும்போது ” இதுவரை 2.8 லட்சம் பேர் தங்களுக்கான
மான்யத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதனால்
நூறு கோடி ரூபாய் மிச்சமாகும். இது இந்த நாட்டின்
ஏழைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும்.
இன்னும் அதிகம் பேர் ” மான்யத்தை தியாகம் செய்ய ”
முன் வரவேண்டும்” என்றார்.

சம்சாரி ஒருவர் இது குறித்து விலாவாரியாக
விவரித்து ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். 
“நான் ஏன் என் LPG மான்யத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்”
என்று தலைப்பிட்டு ஆங்கிலத்தில் அந்த கடிதம்
அமைந்திருக்கிறது…. ஒரு நண்பர் அதை எனக்கு அனுப்பி
வைத்து இது குறித்து நீங்களும் எழுதுங்களேன்
என்று கேட்டிருக்கிறார்…

அந்த கடிதம் ஏற்படுத்திய தூண்டுதலில்
அதில் அவர் குறிப்பிடும் சில முக்கிய விஷயங்களையும்
உள்ளடக்கி கீழே நான் எழுதி இருக்கிறேன்….

————-

எங்கள் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு –

சமையல் எரிவாயு மான்யத்தை நான் விட்டுக் கொடுக்க
முன்வர வேண்டுமென்று,
வேலை மெனக்கெட்டு,
என் போனிலேயே,
என் செலவிலேயே – வேண்டி, விரும்பி
கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்….!
மகிழ்ச்சியோடு நானும் இதற்கு ஒப்புக்கொள்வேன்…
ஆனால் அதற்கு முன் கீழ்க்கண்ட விஷயங்கள்
நடைபெற்றால் தேவலை….!!!

– நாட்டின் சாதாரண குடிமகன் இதைச் செய்வதற்கு முன் –
இந்த நாட்டை வழிநடத்திச் செல்லும் அரசியல்வாதிகளும்,
அத்தனை அமைச்சர்களும், சட்டமன்ற, பாராளுமன்ற
உறுப்பினர்களும், முதலில் தங்கள் மான்யத்தை விட்டுக்
கொடுப்பதாக அறிவிக்கச் செய்ய முடியுமா …?

– உங்களில் முக்கால்வாசிப் பேர்கள் தேர்தலில்
போட்டியிடும் நேரத்தில், உங்கள் சொத்து விவரத்தை
அறிவித்திருக்கிறீர்கள்.
அதில் உள்ள கோடீஸ்வரர்கள் அனைவரும் – தங்களுக்கு
சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என்கிற முறையில்
கிடைக்கும் சலுகைகளை விட்டுக் கொடுப்பதாக
அறிவிக்கச் செய்ய முடியுமா …?

– சட்டமன்ற, பாராளுமன்ற – கூட்டங்களில் அநேக
பிரச்சினைகளில் – எதிரும் புதிருமாக நின்று
அடித்துக் கொள்ளும் நீங்கள் அனைவருமே,
அதெப்படி உங்களது சம்பளம், படி, சலுகைகளை
உயர்த்தி மசோதாக்கள் வரும்போது மட்டும்- ஒருமித்த
குரலில் ஒன்றுபட்டு – உடனடியாக விவாதமே இன்றி
நிறைவேற்றி கொள்கிறீர்கள் …?

– கட்சி அடிப்படையில் நாட்டின் பிரச்சினைகளை
விவாதிப்பதை விட்டு விட்டு, மக்களுக்கு எது நன்மை-
எது தீமை என்கிற கோணத்தில் உருப்படியாக நீங்கள்
விவாதிப்பதை நாங்கள் என்று காண்பது …?

– வளம் பெற்ற நாடான ஜெர்மனியின் சான்ஸ்லர் திருமதி
ஏஞ்சலா மெர்கெல் -தன் அலுவலகத்திற்கு பணிக்குச்
செல்லும்போது பொதுமக்கள் பயன்படுத்தும்
சாதாரண ரயிலில் செல்லும்போது –

– கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே
வாழும் இந்த இந்தியத் திருநாட்டில், அரசியல்வாதிகளான,
அமைச்சர்களான, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களான
நீங்கள் மட்டும், அரசாங்க செலவில் தனி விமானம், தனித்தனியே ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை வைத்துக்கொண்டு பயணிப்பது எப்படி …?

– உங்கள் சொந்த வசதி, சௌகரியங்களுக்காக செலவழிக்கப்படும்
ஒவ்வொரு பைசாவும், இந்த நாட்டின் குடிமக்கள் செலுத்தும்
வரியிலிருந்து தான் எடுக்கப்படுகிறது என்பது உங்கள்
நினைவிற்கு வருவதே இல்லையா …?

– நீங்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்தும்
தொலைபேசிகளுக்காக –
உபயோகப்படுத்தும் மின் வசதிகளுக்காக –
குடும்பத்தோடு தங்கும் சொகுசு பங்களாக்களுக்காக –
இந்தியா முழுவதும் விமானத்திலும், ரயிலிலும்
பயணப்படுவதற்காக – உருப்படியான
வேலை எதுவும் இல்லாமல்,
சும்மாவே ஊர்சுற்றிப்பார்க்க நீங்கள் மேற்கொள்ளும்
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக –

-எத்தனை கோடி ரூபாய்களை நாங்கள் வரியாகக்
கொடுக்கிறோம் என்பதை என்றாவது நீங்கள் நினைத்துப்
பார்த்திருக்கிறீர்களா ?

– உங்கள் சொந்த சௌகரியங்களுக்காக ஆகும் இந்த
செலவுகளை எல்லாம் நீங்களே ஏற்றுக் கொள்ளும்
சுபதினம் என்றாவது வருமென்று குடிமக்களாகிய நாங்கள்
எதிர்பார்க்கலாமா …?
– மிகச் சாதாரண தலைவலி, வயிற்று வலிகளுக்கெல்லாம் கூட,
நட்சத்திர வசதிகள் நிரம்பப்பெற்ற உயர் மருத்துவ மனைகளில்
தங்கி மருத்துவ உதவி பெறுகிறீர்களே…. உங்கள் சக இந்தியர்கள் எத்தனை பேர் சரியான மருத்துவ உதவி கிடைக்காமல்
தினமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை என்றாவது
நீங்கள் எல்லாம் நினைத்துப் பார்த்தது உண்டா …?
– இந்த வசதிகளை எல்லாம் நீங்கள் உங்கள் சொந்தக்காசில்
செய்துக்
கொள்ளும் நா
ள் என்றாவது வருமா…. ?

– அப்படி என்ன தங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமென்று
இத்தனை பூனைப்படைகளையும், துப்பாக்கி ஏந்திய
சிப்பாய்களையும் துணைக்கு வைத்துக்கொண்டு Z என்றும்
Z+ என்றும் சொல்லிக் கொண்டு உங்கள் மந்திரிகள் ?திரிகிறார்கள் ?
தினமும் உங்கள் கூட படாடோபத்திற்காக துணைக்கு வரும்
பூனைப்படை, யானைப்படை – எல்லாவற்றிற்கும் கொடுக்கும்
சம்பளப்பணம் – எங்கள் வரியிலிருந்து வருவது தானே ?

– இந்த நாட்டையே பாதுகாக்க வேண்டிய பொறுப்பில்
இருக்கும் – உங்களை பாதுகாக்க நாங்கள் செலவழிக்க
வேண்டியிருக்கும் இந்த பரிதாப நிலை என்று மாறும் …?

– சம்பாதிப்பது ஒரு வேளை சாப்பாட்டிற்கே பற்றாமல் 
எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் இந்த நாட்டின்
நடைபாதைகளில் பட்டினியோடு படுத்துத் தூங்கும்போது –

– உங்களுக்கு ஏன் பாராளுமன்ற கேண்டீன்களில்
மலிவு விலையில் உணவுப் பொருட்கள் …?
ஒரு கப் டீ ஒரு ரூபாய்க்கும்,
ஒரு சாப்பாடு 12 ரூபாய்க்கும்
எந்த குடிமகனுக்கும் இந்த நாட்டில் கிடைப்பதில்லையே….
கோடீஸ்வரர்களான உங்களிடம் கொடுக்க காசில்லையே
என்றா இந்த மலிவு விலை ….?

– உங்களின் இந்த மலிவு விலை சோற்றுக்கு கூட –
அன்றாடங்காய்ச்சியான இந்த நாட்டின் குடிமகன் தான்
காசு கொடுக்கிறான் என்பது உங்கள் மனசாட்சியை
என்றுமே உருத்தவில்லையா ?

– நாங்கள் செலுத்தும் வரிகள் எத்தனையெத்தனை …
Income tax,
Service Tax,
ProfessionTax,
Value Added Tax,
Wealth Tax,
Corporation Tax,
Automobile Registration Tax and Property Tax –

சம்பாதிப்பதில் பாதியை வரியாகப் பிடித்துக் கொள்ளும்
இந்த அரசு நிர்வாகம் உங்களுக்கு மட்டும் எல்லாவற்றிலும்
விலக்கு கொடுத்திருப்பது உங்களுக்கு உறுத்தவில்லையா …?
உங்களுக்கும் சேர்த்து தானே, எங்களிடம் வசூல்
செய்யப்படுகிறது…?

உங்களுக்கு, நீங்களே இயற்றிக்கொண்ட சட்டங்கள் மூலம்
கிடைத்துள்ள அத்தனை சலுகைகளையும் விட்டுக் கொடுத்து
இந்த நாட்டின் கௌரவமுள்ள குடிமகனாக நீங்கள்
எல்லாம் மாறும் நாள் வருமா …?

– இந்த நாட்டை நேர்மையாகவும், பொறுப்புடனும்
நிர்வாகம் செய்வதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
நீங்கள் அனைவரும் – என்றைக்கு,
உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொண்டுள்ள
இந்த சலுகைகள் அத்தனையையும் விட்டுக் கொடுக்கிறீர்களோ –
அன்றைக்கு நிச்சயம் குடிமக்களாகிய நாங்கள் அனைவரும்
எங்கள் சமையல் எரிவாயு மான்யத்தை –
நீங்கள் கோராமலேயே நாங்கள் அனைவரும் அவசியம்  விட்டுக் கொடுப்போம்…!!! 
                   
🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋

12 மே, 2022

இன்றைய குறள்

திருமூலர் ஜயந்தி பூஜை

நலக்குறிப்புகள்

சுற்றுச்சூழல்

ஹோமியோபதி விழிப்புணர்வு கூட்டம்

நண்பர்களே!

நமது அப்ரோச்-அறக்கட்டளை அமைப்பின் ஹோமியோபதி விழிப்புணர்வு கல்விக்குழு கூட்டம்
இந்த வாரம் ஞாயிறு 
 (15-05- 2022) நடைபெறவுள்ளது.

விவரம் :-

இளம் நிலை:-

1. Arnica materia medica,
             --- J.Mohana,

2. History of Medicine,
              --- Neyam Sathya 

வளர் நிலை:-

1. Organon of medicine (6 - 10 Aphorisms),

2.Masters view on the medicine  - "Belladonna "
(Atleast five masters)
                

நேரம்:- மதியம் 3.00 மணிக்கு
இடம் :- நடேசனார் பள்ளி, 18, பழைய ESI சாலை,
(கனரா வங்கி பேருந்து நிறுத்தம்),
அம்பத்தூர்.

தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். 
நன்றி.

10 மே, 2022

இன்று சில தகவல்கள்

கவிதை நேரம்

நான் மிச்சம் வைத்த மீன் துண்டுகளைச்சாப்பிட்டுவிட்டு
கண்மூடி தியானத்தில்
ஆழ்ந்துள்ளது
எங்கள் வீட்டுப் பூனை

பூஜை அறையில்
தீப தூபங்களுக்கு மத்தியில்
தடுமாறுகிறேன் நான்

கடைசியில் நிஷ்டை
கைகூடி விட்டது
பூனைக்கு!

நன்றி :
தஞ்சாவூர்க்கவிராயர்

கோபுர தரிசனம்

இன்றைய குறள்

நலக்குறிப்புகள்

8 மே, 2022

கவிதை நேரம்


நன்றி :
கவிஞர் நெல்லையப்பன் 

இன்றைய குறள்

ஆன்மீக சிந்தனை

நலக்குறிப்புகள்

சுற்றுச்சூழல்

அன்னையர் தின வாழ்த்துக்கள்