என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
28 பிப்., 2026
பண்டைய இலக்கியச் சிறுகதைகள்-3: நீயே அது (உபநிடதக் கதை – சாண்டோக்ய உபநிடதம்)
இன்றைய புத்தகம்
27 பிப்., 2026
26 பிப்., 2026
பண்டைய இலக்கியச் சிறுகதைகள்-2: பொறுமையின் பலன்
இன்றைய புத்தகம்
யவன ராணி எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம். 1960களில் குமுதம் வார இதழில் இத்தொடர் வெளிவந்தது. வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்தக் கதையில் சங்ககாலத்தில் வாழ்ந்த சோழர் வரலாற்றை ஒட்டி கற்பனைகளையும் சேர்த்து கதை எழுதப்பட்டுள்ளது.
கரிகாலன் (திருமாவளவன்) வெண்ணி (கோவில்வெண்ணி தஞ்சை - திருவாரூர் சாலையில் உள்ள ஓர் சிற்றூர்) நகரில் சேர மன்னன் பெருன்சேரலாதனையும், பாண்டியனையும், பன்னிரு வேளிர் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்த இருங்கோவேள் படையையும் அழித்து மன்னனாக முடி சூடியதை இப்புதினம் விவரிக்கின்றது.
கதையின் நாயகன் சோழ நாட்டின் படைத்தலைவனாக இருந்த இளஞ்செழியன். இளஞ்செழியன் தன் முறைப்பெண் பூவழகியின் மீது கொண்ட காதலையும், யவன ராணி (கிரேக்க ராணி) இளஞ்செழியன் மீது கொண்ட மாசறு காதலையும் விவரிகின்றது. தமிழகத்தில் (பூம்புகார் நகரில்) தமிழருக்கு யவனர்கள் சேவகம் செய்து வந்ததையும், பூம்புகாரின் சிறப்பையும், கடல் வாணிபத்தில் தமிழர் பங்கையும், இப்லாஸ் என்ற யவனன் இளஞ்செழியன் மீது கொண்ட விசுவாசத்தையும், டைபிரியஸ் என்ற யவன கடற்படைத் தலைவன் போர் திறமைகளையும் இப்புதினம் விவரிக்கின்றது.
நன்றி: விக்கிப்பீடியா