16 அக்., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-27: "வாக்காளப் பெருமக்கள்"

அதைத் தருகிறேன்
இதைத் தருகிறேன்
ஓட்டுப்போடென்று
அனைத்து வேட்பாளர்களும்
வாக்களித்துவிட்டு,
ஒட்டுப்போடுபவனைப் பார்த்து
"வாக்காளன்" என்பது
என்ன நியாயம்?

அவர்களெல்லாம்,
தவறுவதற்காகவே
வாக்குறுதிகளைத்
தருவதினாலே,
மக்களை வாக்காளர்களென்று
ஏமாற்றுகிறார்களா?

ஓட்டுப்போடும்
ஒருநாள்
தலைவர்கள்
தலையெழுத்தை
தாங்களே எழுதட்டும்
என வாய்ப்புக் கொடுத்தாலும்
தப்புப் தப்பாய்
எழுதித் தவிப்பவர்கள்

தானே தன் தலையில்
மண்ணை வாரிப்போட்டு,
தலை சொரிந்துகொள்ள
எரியும் கொள்ளியில்
நல்ல கொள்ளியை
தேர்ந்தெடுப்பவர்கள்;
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை
ஏய்ப்பவர்களுக்கு என்ன குறை?

கருத்துகள் இல்லை: