4 அக்., 2008

அனுபவக் குறிப்பு-1 "இயற்கை உணவின் அற்புதம்" :

சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என் தாயாருக்கு கருப்பையில் பிரச்னை ஏற்பட்டது. புற்றுநோயாக இருக்கலாம் என்றும், சென்னை சென்று புற்றுநோய் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவது நல்லது என்றும் டாக்டர்கள் ஆலோசனை கூறினார்கள். ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின் செயலரை அணுகி ஆலோசனை கேட்டேன். அவர் சொல்லியபடி என் தாயாருக்கு உணவு தயாரித்துக் கொடுத்தேன்.

காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல், கரிசாலை, கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை, வல்லாரை, புதினா, மணத்தக்காளி முதலிய மூலிகைகளின் ஒன்றின் சாறு ஒரு டம்ளர் அளித்தேன். மதிய உணவாக பழக்கலவையும், காய்கறிப் பசுங்கலவையும் கொடுத்தேன். இரவில் தேங்காய், பழங்கள் மட்டும் கொடுத்தேன்.

ஆறு மாதங்கள்தான் உயிரோடு இருப்பார் என்று கெடுவிதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக இருந்த என் தாயார் மூன்று மாதங்களில் முழு நலம் பெற்றார்கள்.
இன்று அவர்களுக்கு வயது அறுபத்தி இரண்டு. தமது வேலையைத் தாமே செய்துகொண்டு, பிறர்க்குப் பாரமாக இல்லாமல், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.

நானும் காலையில் யோகாசனம், ஆறு டம்ளர் தண்ணீர் அருந்துதல், ஓரளவு இயற்கை உணவு, உண்ணாநோன்பு, முதலியவற்றைப் பின்பற்றி எந்த நோயும் இல்லாமல் நலமாக வாழ்கிறேன்.

- எஸ்.ஆர்.கணேசன், கரைகண்டம்சாத்தனூர்.
நன்றி: இயற்கை மருத்துவம், ஜூலை 2004 ( மதுரை இயற்கை மருத்துவ சங்க வெளியீடு)

1 கருத்து:

thirugnanam siva சொன்னது…

எளிமையான வாழ்க்கை ,எளிமையான உணவு நம்மை எப்போதும் ஆரோக்கியமாகத்தான் வைத்திருக்கும்.. நன்றி அய்யா... தாங்கள் நன்றி கூறிய விதம் பிடித்திருக்கிறது..