29 அக்., 2014

இன்று ஒரு தகவல்-46: சென்னை தமிழ் அகராதி-1:சென்னை தமிழ் அகராதி-1:

சென்னைக்கு புதிதாக செல்லும் மற்ற ஊர்க்காரர்களுக்கு கண்டிப்பாக உதவும்.

குந்து – உட்கார்
கன்பீஸ் – குழப்பம்
டப்பு – பணம்
கயிதை – கழுதை
கம்மனாட்டி – கோமாளி
கஸ்மாலம், கேணை – முட்டாள்
கிருஷ்ணாயில் – மண்ணெண்ணெய்
மால், மாலு – கமிஷன்
மஜா – கேளிக்கை
மட்டை – போதையில் மயங்கி விழுவது
மெர்சல் – பயம்
சொக்கா – சட்டை
பீட்டர் – பெருமைக்காக ஆங்கிலம் பேசுவது
சல்பேட்டா – மலிவு விலை மது
தொங்குறது – ஒதுங்குகிறது
டபாய்க்குறது – ஏமாற்றுவது
பீலா – பொய் சொல்லுவது
டம்மி பீஸ் – ஒப்புக்கு சப்பாணி
கீது – இருக்கு
மெரிச்சிருவேன் – மிதித்து விடுவேன்

கருத்துகள் இல்லை: