17 ஜூன், 2018

இன்றைய சிந்தனைக்கு-209: விடுதலை உள்ளபோது நீங்கள் ஏன் அடிமைத்தனத்தை தேர்வு செய்கிறீர்கள்?


விடுதலை உள்ளபோது நீங்கள் ஏன் அடிமைத்தனத்தை தேர்வு செய்கிறீர்கள்?

வானம் விரிந்து கிடக்கும்போது ஏன் கூண்டுகளை நாடுகிறீர்கள்?

பதில் சிரமமானது அல்ல.

கூண்டு பாதுகாப்பானது.

அது,மழை ,காற்று, வெயில், பகைவர்கள்

ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

உங்களுக்கு என்று ஏதும் பொறுப்பு இல்லை.

ஆனால் விடுதலை மகத்தான பொறுப்பு மிக்கது.

அடிமைத்தனம் ஒரு வியாபாரம்.

நீ உன் விடுதலையை விற்று விட்டாய்.

வேறு யாரோ,உன் உணவுக்காக, இருப்பிடத்திற்காக, பாதுகாப்பிற்காக, உன் தேவைகளுக்காகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நீ இழந்தது உன் சுதந்திரத்தை.

நீ உன் சிறகுகளை,நட்சத்திரம் மிக்க வானத்தை இழந்துவிட்டாய்.

கூண்டுக்குள் பாதுகாப்பாக இருந்தாலும்

நீ இறந்தவன்.

நீ ஆபத்தில்லாத வாழ்வைத் தேர்வு செய்துவிட்டாய்.

உன் ஆழமான இதயம் அடிமைத்தனத்தை ஒப்பாதபோதும்

நீ கூண்டுக்குள் திரும்பும் காரணம் அதுதான்.

நீ உன் சுதந்திரப் பாடல்களைக் கூண்டுக்குள் இருந்து பாடுகிறாய்.

கதவுகள் திறந்தே உள்ளன வானம் கைவசம் உள்ளது.

நீயோ பொய்மையான வாழ்வுக்கு அடி பணிகிறாய்.

கூண்டு உனக்கு சோம்பலையும் பாதுகாப்பையும் தருகிறது.

ஆனால் நீ விடுதலை,விடுதலை என்று கத்துகிறாய்.

இது உன்னை நீயே ஏமாற்றிக் கொள்வதாகும்.

நீங்கள் உங்கள் பாதுகாப்புகளை,சோம்பலை விட்டு வெளியேறுங்கள்.

ஆகாயம் முழுவதும் உங்கள் வீடுதான்.

ஒரு பயணியாக,வாழ்வின் எல்லா ரகசியங்களையும் மர்மங்களையும் அறியப் புறப்படுங்கள்.

வாழ்வைத் துயரமான அம்சமாக மாற்றி விடாதீர்கள்.

கருத்துகள் இல்லை: