11 செப்., 2018

நலக்குறிப்புகள்-130: நடைப்பயிற்சியின் முக்கியத்துவம்

நடைப்பயிற்சியின் முக்கியத்துவம் :

1. இதயம் ஆரோக்கியமாகும்.

LDL cholesterol எனப்படும் கெட்ட கொழுப்பை குறைத்து HDL கொழுப்பை அதிகரிக்கக் செய்யும். இந்த LDL cholesterol தான் இரத்த நாளங்களில் படிந்து மாரடைப்பை ஏற்படுத்தும் ( கொழுப்பு வகைகள் பற்றி தனியா எழுதணும்). தசைகளை வலுவடையச் செய்யும். உடல் முழுவதிலும் இரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.

2. உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
மாரடைப்பு, வாத நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
பெருவாரியான நோய்களில் இருந்து பாதுகாக்கும். நீரழிவு, ஆஸ்துமா, சிலவகை புற்று நோய்கள் முக்கியமானவை.

3. உடல் எடையை சீராக்க உதவும்.

சாதாரணமாக தினமும் 600 கலோரி உணவைக் கபலீகரிக்கிறோம். 2 கிமீ தூரத்தை அரை மணியில் நடந்தால் தான் 75 கலோரியை எரிக்க முடியும். மிச்சம் 525 கலோரி உணவு உடலில் எடையாகத் தான் சேரும். 600 கலோரிகளை எரிக்க எவ்வளவு உடல் உழைப்பு தேவை என்பதை நீங்களே கணக்கிடுங்கள்.

4. உடல் உறுப்புகளை அழகுறச் செய்யும். அங்கங்கள் சீரான லடசணத்தில் இருக்க வழி செய்யும்

5. லேசான வெயிலில் நடந்தால் விட்டமின் D உடலுக்குக் கிடைக்கும். இதனால் எலும்புகள் பலப்படுவதுடன் சோம்பல் நீங்கி புத்துணரவு கூடும்

6. Dementia  எனப்படும் மனத் தளர்ச்சி, முதுமை மறதி, அறிவாற்றல் இழப்பு உளத் தொய்வு இவைகளை நீக்கும்.

7. osteoporosis எனப்படும் எலும்பு நோய்கள் வராமல் தடுத்து மூட்டுகளை வலுவடையச் செய்யும். எலும்பு வலுவடையும். பெண்களுக்கு மிக அவசியம்.

8. ஆற்றலும் சுறுசுறுப்பும் :

சீரான இரத்த ஓட்டத்தால் உடல் உறுப்புகள் தேவையான பிரானவாயுவைப் பெறுவதால் உடல் எந்த நேரத்திலும் எதைச் செய்யவும் தயங்காத நிலையில் இருக்கும். நேரத்தில் பசி, செரிமானம் இவை இயல்படையும்.

9.நடக்கும் போது கைகளின் அசைவு முக்கியம் பெறுகிறது. கைகளை அதிகம் வீசுவதால் இயல்பாகவே கால் மற்றும் இதர உறுப்புகளும் அதே வேகத்தை அடைய முயற்சிப்பது உடலியழ்பு. இதனால் அதிக கலோரிகளை சீக்கிரம் எரிக்கலாம்

10. மகிழ்சியாக வைத்திருக்கும். நடையின் போது சந்திக்கும் வித்தியாசமான சூழல். மனிதர்கள் இவை ஆரோக்கியமான எண்ணங்களை உண்டாக்கும். மனிதன் நாள் முழுதும் புத்துணரச்சியுடன் மகிழ்ச்சியாய் இருக்க இவை போதாதா?

சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் அனைத்து தரப்பினரும் காலையில் நடப்பது  அவர்களை எப்போதும் மகிழ்வுடன் வைத்திருக்கும்.

கருத்துகள் இல்லை: