கன்னி (புரட்டாசி) மாதம் சபரிமலையில் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.
1) பக்தர்கள் வரும் தனியார் வாகனங்களுக்கு நிலக்கல் வரை மட்டுமே அனுமதி.
2)நிலக்கல்-பம்பா: கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகள் கிடைக்கும்.நிலக்கல்லிலேயே பம்பா வரை போய் வர கூப்பன்கள் வாங்க வேண்டும் பேருந்தில் நடத்துநர்
கிடையாது.
3)பம்பா வந்தடைந்தபின் த்ரிவேணி பாலம் மற்றும் அய்யப்பன் பாலம் வழியாக சர்வீஸ் சாலை அடைய வேண்டும்.அங்கிருந்துஆஸ்பத்திரி வழியாக கணபதி கோவில்
வந்தடைய வேண்டும்.
4)பம்பையாற்றின் மேலான நடை பாலம் மூடப்பட்டுள்ளது.
5) த்ரிவேணி முதல் ஆராட்டுக்கடவு வரை அதிக இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது மற்றும் மண் ஈரமாக உள்ளதால் பதக்தர்கள் யாரும் மண்ணில் இறங்கி நடக்கக் கூடாது.
6) பம்பையில் ஒரு பக்கம் குளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் முறை வரும் வரை காத்திருக்க வேண்டும்.வேறு எங்கும் ஆற்றில் இறங்கக் கூடாது.
7) பக்தர்கள் அங்கிருக்கும் செக்யுரிடிகள் கூறும் விதி முறைகளை பின்பற்ற வேண்டும்.பம்பா போலீஸ் ஸ்டேஷன் எதிர்ப்புறம் உள்ள ஹில்டாப் பார்க்கிங் பழுதடைந்துள்ளது. அங்கு யாரும் செல்லக்கூடாது .
8)பம்பா பெட்ரோல் பங்க் பக்கத்தில் உள்ள சுவர் த்ரிவேணி முதல் ஆராட்டுக்கடவு வரை இடிந்துள்ளது.யாரும் இவ்விடங்களுக்குச் செல்லக்கூடாது
9)நிறைய பாம்புகள் உள்ளன முக்கியமாக காட்டுப்பகுதியில் ஜாக்கிரதையாக இருக்கவும்.
10)தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது.
11)குடி நீர் எடுத்துச் செல்லவும்.
12) ப்ளாஸ்டிக் பாட்டில் தவிர்க்கவும்.பம்பையில் ப்ளாஸ்டிக் தடை செய்யப் பட்டுள்ளது.
13)இருமுடியில் ப்ளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
14) சாப்பாடு மற்றும் உணவு வகைகள் நிலக்கல்லில் கிடைக்கும்.
15)தங்களுக்கு வேண்டிய உணவை தாங்கள் எடுத்துச் செல்லலாம்.
16) வெள்ளத்தினால் நீரின் ஆதாரங்கள் மூடப்பட்டுள்ளது இதனால் நீர் பற்றாக்குறை உள்ளது.பக்தர்கள் குறைந்த அளவு நீர் உபயோகப் படுத்த வேண்டும்.வீணாக்கக் கூடாது.
17)நிலக்கல்லில் பயோ டாய்லெட்டில் உள்ளன.பழைய டாய்லெட்டுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் உபயோகிக்க முடியாது.நிலக்கல் தாண்டி டாய்லெட் வசதிகள் குறைவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக