29 அக்., 2018

குட்டிக்கதை-22: தலைமுறை இடைவேளி

குட்டிக்கதை - தலைமுறை இடைவேளி

அன்று பரிட்சை எழுத காலண்டர்அட்டையை கொடுத்த என் தந்தையிடம்

சரி மேல மாட்டுற கிளிப்பாவது(வெறும் 3 ரூபாய்)வாங்கி தாங்க என்று அழுதபோது ,😥

டேய் உனக்காவது இது கிடைத்தது ,
நான் படிக்கும்போது இதுக்குகூட எனக்கு
வசதியில்லை என்று சொன்ன

என் தந்தையை பார்த்து நம்பாமல் நக்கலாக சிரித்தேன்!!!😉😉

இன்று மூன்றாவது வகுப்பு படிக்கும் என் மகளுக்கு exam board வாங்க போனபோது

150ரூபாய் மதிப்புள்ள examboardஐ பார்த்து உதட்டைபிதிக்கி
இதவிட betterஆ வேறஇல்லையா என்று கடைகாரரைப் பார்த்து என் மகள் கேட்டபோது எனக்கு தூக்கிவாரிபோட்டது,,

என் மகளிடம் பொறுமையாக பாரும்மா, அப்பா படிக்கும்போது பரிட்சைஎழுத காலண்டர்அட்டையை தான் கொண்டு போவேன்,,

ink பாட்டில் வாங்கவசதி இல்லாமல்(10ருபாய்) 10 பைசாவிற்கு கடையில் மை வாங்கியிருக்கிறேன்,

, சில சமயம் பக்கத்தில்இருப்பவர்களிடம் ஒரு சொட்டு மை கடன் கேட்பேன்,,,

,புதிய புத்தகங்கள்வாங்க காசில்லாமல் போனவருடம் பாசான அண்ணன்மார்களிடம் இருந்து புத்தகங்களை வாங்கி பள்ளிக்கு போனேன்;

bookஐ மறந்தாலும் மதிய சத்துணவுக்காக தட்டை கொண்டுபோக மறந்ததில்லை;;;;

என்று என் மகளிடம் நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொன்னபோது

நம்பாமல் நக்கலாக சிரிக்கிறாள்!!

நான் அன்று என் தந்தையை பார்த்து சிரித்ததுபோலவே!!!!😉😉

நாசமா போறவ குடிக்கிறதண்ணீய குடம் நாலானா(25பைசா) சொல்லுறா என்று புலம்பிக்கொண்டே பக்கத்து தெருவிலிருந்து தண்ணீர் பிடித்த என் தாயாரை பார்த்த அதே கண்களால்

இன்று அப்பா filter water கேன்
(2 குடம் இருக்குமா?) வெறும் 35 ரூபாய்தானாம் என்று ஆச்சரியப்படும் என் மகளையும் (3 std படிக்கிறாள்) பார்க்கிறேன் 🤔

, இதுதான் தலைமுறை இடைவேளியா?

நாய் கூட நடக்காத நண்பகல் வேளையில் நண்பர்களோடு கண்மாய்கரையை ஒட்டிய groundல் கிரிக்கெட் விளையாடிவிட்டு

தாகம் எடுத்தால் ஏதாவது ஒரு வீட்டின் கதவை தட்டி

( அவங்க என்ன ஆளுங்க என்று எங்களுக்கு தெரியாது, நாங்க என்ன ஆளுங்க என்று அவங்களுக்கும் தெரியாது! !)

அக்கா குடிக்க கொஞ்சம்தண்ணீ தாங்க, என்று கேட்டால் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து தருவார்கள்

நாங்கள் எல்லாரும் போட்டிபோட்டு கொண்டு மூச்சிரைக்க சட்டை நனைய தண்ணீர் குடிக்கும்அழகை ரசித்துகொண்டே தம்பி போதுமா இன்னும் வேணுமா என்று கேட்பார்கள்!!

( ஆளுக்கு ஒரு சொம்பு என்றால் குறைந்தது 10 சொம்பு கிட்டத்தட்ட 4 லிட்டர்) ;

இன்று என் வீட்டின் கதவை 10 பசங்க தட்டி தண்ணீர் கேட்டால் என் மனைவி தருவாளா? சந்தேகம்தான்?

என்மனைவியிடம் கேட்டேன் ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள் " நான் கதவையே திறக்க மாட்டேன்"!!!!!!!

இன்று jio SIM ல் இலவசமாக பேசிக்கொண்டு 10 ரூபாய்க்கு வடையை சாப்பிட்டு கொண்டு இருக்கும் நான் ,

ஒரு காலத்தில் 1ரூபாய்க்கு வடையை சாப்பிட்டு கொண்டு 6ரூபாய்க்கு போன் பேசி இருக்கிறேன்( ஞாயிற்குகிழமை ஆப் charage என்று வரிசையில் நின்று இருக்கிறேன்)!!!!

இன்று 64gb memory card ல்10 படங்களை வைத்து இருக்கும் நான் ஒரு காலத்தில் யாருடைய வீட்டில்லாவது டெக்கில் புது படம் போடுகிறார்கள் என்றால் பிச்சைக்காரனை போல வாசலில் தவம் கிடந்து இருக்கிறேன்; "!!!

இன்று
ஒரு லிட்டர் gold winner oil வாங்க ஓடும் நான் ஒரு காலத்தில் 100 milli எண்ணெய் வாங்க டானிக் பாட்டிலில் சரடை கட்டி கொண்டு ஓடி இருக்கிறேன்

(கடைக்கார அண்ணாச்சி திரும்பி எண்ணை ஊத்துற கேப்புல முன்னாடி இருக்கும் கடலபுண்ணாக்க எடுத்து லபக்குன்னு வாயில் போடுவது தனி சுகம்)

boost is secret of my energy என்று விளம்பரத்தில் சொன்ன கபில்தேவை பார்த்து வாழ்க்கையில் ஒரு முறையாவது boostஐ வாங்கி குடித்து விடவேண்டும் என்று நினைத்தேன்;

இன்று பூஸ்ட், ஹார்லிக்ஸ், காம்பிளான் , பீடியா சுயர் என்று எதை வாங்கி குடுத்தாலும் taste சரியில்லை என்று பிள்ளைகள் சாப்பிடாமல் குப்பைக்கு போகிறது;

நான் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டேன்; இப்ப இருக்கிற புள்ளைங்க சாப்படுறதுக்கு கஷ்டப்படுதுங்க 🤔🤔

இது நெட்டில் சுட்டது இல்லை!
வாழ்கையில் பட்டது!!..

நன்றி: எல்.கார்த்திகேயன், புதிய தகவல்கள், முகநூல்

கருத்துகள் இல்லை: