தமிழ் இலக்கிய உலகில் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முழுநேர எழுத்தாளராக இயங்கிவரும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அவர் எழுதிய ‘சஞ்சாரம்’ நாவலுக்காக இந்த விருது வழங்கப்படவுள்ளது. கரிசல் வட்டாரத்தில் வாழ்ந்த நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்க்கை, வலிகள் ஆகியவற்றை மண் மணம் மாறாமல் அந்நாவலில் படைப்பாக்கியுள்ளார்.
எஸ்.ரா. தமிழ் இலக்கிய உலகிற்கு ஆற்றிய பணிகள் அளப்பரியவை. சிறுகதைகள், நாவல், விமர்சனம், கட்டுரைகள், சொற்பொழிவு எனப் பலதளங்களில் இயங்கி வரும் அவர் அனைத்துத் துறை சார்ந்தவர்களுக்கும் வியப்பை ஏற்படுத்துபவராகவே இருக்கிறார்.
(தகவலுக்கு நன்றி: மின்னம்பலம்.காம்)
இந்த நேரத்தில் காரைக்குடி புத்தகத் திருவிழாவிற்கு அவரை வரவழைத்து கௌரவித்ததும், அவரோடு பேசி மகிழ்ந்ததும் நினைவிற்கு வருகிறது.
நான் பெரிதும் போற்றும் எஸ்.ரா.அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக