20 அக்., 2019

இன்றைய சிந்தனைக்கு-336: கசப்பான உண்மை

இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சுகாதாரமில்லாத முறை என்றான். நாமும் மாறினோம். இன்று அதையே பார்பெக்யூ  என்று விக்கிறான்.

உப்பு + கரியில் பல் தேய்த்தோம். பற்பசையை அறிமுகப்படுத்தினான் இப்போது உங்கள் பற்பசையில்  உப்பு இருக்கா, சார்கோல்  இருக்கா என்று கேட்கிறான்.

மண்பானை , மண்சட்டியில் சமைத்தோம். உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான். இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் நட்சத்திர விடுதிகளில் விக்கிறான் .

நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம். ஜெர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான். இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் விந்தை இறக்குமதி செய்கிறான்.

இளநீர் , பதனீரைப் பருகினோம். பூச்சி மருந்து கலந்த பாங்களைக் கொண்டு வந்தான். நாமும் அவற்றை விரும்பி வாங்கினோம். இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான்.

கார்ப்பொரேட்டுகளின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொன்மைகளைத் தொலைத்த முட்டாள் இனம் நாமாகத் தானிருப்போம் 

நாகரீகப் போர்வையில் நானும் இதே தவறைச் செய்கிறேன் என்பது தான் கசப்பான உண்மை.

கருத்துகள் இல்லை: