பள்ளிக்கல்வியில் மருத்துவ வன்முறை.
Dr. கோ. பிரேமா MD(Hom),
கீழே உள்ள படம், பள்ளிகள் இனி எப்படி இயங்கவேண்டும் என்பதற்கு CDC அளித்திருக்கும் விதிகள். அமேரிக்காவிற்கு.
சைனாவில் பள்ளி வாசலில் குழந்தைகள் மீது கிருமிநாசினி ஸ்ப்ரே செய்தபின்னர் தான் அனுமதிக்கின்றனர். இது தற்போது நடந்துவருகிறது.
எனக்கு அந்த காணொளியை பார்த்ததும், ஒன்றுதான் நினைவுக்கு வந்தது.
20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்படித்தான் அமேரிக்காவில் குழந்தைகளுக்கு DDTபீச்சினர். போலியோ எனும் எபிடமிக் இதற்குபின் தான் அங்கு விஷ்வரூபம் எடுத்தது. 1920-40,50களில் அமேரிக்காவில் இருந்த போலியோ எபிடெமிக், இந்தியாவில் அதே காலகட்டத்தில் கிடையாது.
இங்கு1960களுக்கு பின்னர் தான். அப்பதானே இங்கும் DDT பரவலாக வேளாண்மையில் திணிக்கப்பட்டுது. DDT- போலியோ தொடர்பு பற்றி, Weston A Priceன் ஆய்வு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தேடிப்படிக்கலாம்.
ஏற்கனவே அங்கே பள்ளிக்கல்வி மீது மிகப்பெரிய அவநம்பிக்கையும், அச்சமும், பாதுகாப்பின்மையும் இருந்துவருகிறது. வீட்டுக்கல்வி, மாற்றுக்கல்வி, என பள்ளிக்கல்வியை துறப்பவர்கள் கனிசமான மக்கள் தொகை உண்டு.
இனி இருக்கிற நிலையை பார்த்தால், பள்ளிக்கு குழந்தையை அனுப்புவதே ஆபத்தானதாக தெரிகிறது.
ஒருபக்கம் இதுசார்ந்து எதிர்ப்பை நகர்த்தலாம். ஆனால் அது எவ்வளவு தூரம் பலனளிக்கும் என்று தெரியவில்லை. அதோடு, நம் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் பெறும்வரை, என்ன செய்வது என்ற கேள்வியும் உள்ளது.
இனி தடுப்பூசிக்கான வணிக-நுகர்வோர் இலக்கு, பள்ளிக்கல்வியில் தொடரும் குழந்தைகள் தான்.
இந்தியாவில் கட்டாயத்தடுப்பூசி சட்டம் இதுவரை இல்லை. அப்படி இருந்தும் பல இடங்களில் குழந்தைகளுக்கு பெற்றோர் விருப்பம் பெறாமலும், மறுத்தபோதும் பல நெருக்கடிகளை கடந்த மூன்று ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். இரண்டு வழக்குகள், அதில் பெற்றோர் சாதகமாக தீர்ப்பு இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும்.
இருந்தும், தடுப்பூசி மட்டுமல்ல, பல ஆபத்தான மாத்திரைகள் , அறமற்று சில மருத்துவ கிளினிக்கல் டிரையல் என நீள்கிறது பள்ளிக்குழந்தைகள் மீது திணிக்கப்படும் மருத்துவ வன்முறை.
கலிபோர்னியாவில் சென்ற ஆண்டு பள்ளிசேர்க்கைக்கு கட்டாய தடுப்பூசி சட்டமான போது, பலர் வீட்டுக்கல்விக்கு மாறினர். அனைவருக்கும் இது சாத்தியமில்லை.
மேலும் எந்த மருத்துவ உதவியும் மறுக்கப்படும். தடுப்பூசி மறுப்பாளர்கள் அலோபதி மறுப்பாளர்கள் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நினைவில் கொள்க. அங்கு மாற்று மருத்துவமுறைகளுக்கு காப்பீடு கிடையாது. சாமானியரால் மாற்று மருத்துவம் பார்ப்பது அதிக செலவு. இதுவும் ஒருவகை அரசியல்தான்.
தடுப்பூசிக்கு மருத்துவ விலக்கு அளிப்பதிலும் பல கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டது. அதாவது தடுப்பூசியினால் ஒருமுறை பாதிக்கப்பட்ட குழந்தைக்கு பாதிப்பை பொருத்து விலக்கு அளிக்கப்படும். ஆனால் இந்த சட்டமாற்றத்தில் ,தடுப்பூசியினால் வலிப்பு ஏற்பட்டால் கூட விலக்கு மறுக்கப்பட்டது.
அதனால், வீட்டுக்கல்வி பின்பற்றயுடியாத, காப்பீடு இல்லாத மாற்றுமருத்துவத்தை பின்பற்றமுடியாத, அலோபதி அவசரசிகிச்சை அடிக்கடி தேவைப்படும் குழந்தைகளின், 650க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அம்மாநிலத்தைவிட்டு, அதுநாள் வரை பார்த்த வேலை, சேர்த்துவைத்த சொச்ச சொத்துகளை விற்று, விட்டுவிட்டு புலம்பெயர்ந்தனர். சில குடும்பங்களில் ஒரு பெற்றோர் அங்கேயே பணியில் தொடர, மற்றொருவர் குழந்தைகளுடன் புலம்பெயர்ந்தனர். கொடுமை.
கலிபோர்னியா ஒரு உதாரணம் மட்டும்தான்.
இதாலியில் ஆயிரக்கணக்கான அம்மாக்கள் மூன்றுநாட்களுக்கும் மேல் சாலைகளிலும், வீதிகளிலும் தன் குழந்தைகளுடன் தொடர் போராத்தில் ஈடுபட்டது மறக்கமுடியாதது.
பொதுவாக, தடுப்பூசி சார்ந்து நடக்கும் வணிகக்கொள்ளை, அரசியல்சூழ்ச்சிகள் வஞ்சனைகள் வன்முறைகளை முடிந்தவரை பேசுவதில்லை.
தடுப்பூசியின் அறிவியலே இங்கே விவாதத்தற்கு முன்னுரிமை பெறவேண்டும் என்பது எனது எண்ணம்.
ஆனால இனி வணிகம், அரசியல், வன்முறையையும் சேர்த்தே பேசவேண்டும் போல.
நல்லவேளை நாம் இந்தியாவில் பிறந்தோம். இங்கேயே வாழ்பவர்களுக்கு, இன்னும் சிறுது காலம் இருக்கிறது. இன்றைய பெற்றோர் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து தப்பிப்போம். அடுத்த 10ஆண்டுகளில் இங்கும் இந்நிலை வரும். அதற்கும் குறைவாகவும் வந்துவிடலாம்.
அடுத்த கல்வி ஆண்டு எப்படி தொடங்கப்போகிறது என்பதில் இருக்கிறது இதற்கான பதில்.
பள்ளிக்கல்வியை துறந்தவர்களை கேள்வி எழுப்புபவர்கள், இதுசார்ந்து ஏனோ கண்டுகொள்வதில்லை. அல்லது அறியாமையிலேயே இருக்கிறார்கள்.
சமூக இடைவெளி குழந்தைகளை உளவியல் ரீதியாக மிகப்பெரிய அளவில் பாதிக்கும். இதுபற்றி தனியாக பேசுவோம்.
பள்ளிக்கல்விக்காக இயங்குபவர்கள், பள்ளியில் குழந்தைகளின் மீது திணிக்கப்படும் மருத்துவ வன்முறைகளையும் இனி கவனத்தில் கொள்ளவேண்டும் என மன்றாடி கேட்கிறேன்.
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும். குழந்தையின் உடல்/மன ஆரோக்கியத்தில் கேடுவிழைவித்து பின் கல்வி கொடுப்பது, எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக