2 மே, 2020

பாராட்டுக்கள்!

இன்று மே 1 என் வாழ்வில் மறக்க முடியாத உழைப்பாளர் தினம்.......

கோயம்பேடு பகுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்  பேரவை தலைவர்  மதிப்புமிகு ஐயா திரு. வெள்ளையன்  அவர்களை சந்தித்து கோயம்பேடு  வியாபாரிகள் அனைவருக்கும்  ஹோமியோபதி தடுப்பு மருந்து கொடுப்பதற்கு வேண்டுகோள் விடுத்தோம்.

 அவர் இன்முகத்தோடு அவருக்கு முதலில்  ஒரு வேளைக்கான  மருந்தை எடுத்துக்கொண்டார்.

அவரின் பரிந்துரையின் பெயரில் திரு. மணிவண்ணன் (தலைவர், உணவு தானிய அங்காடிவியாபாரசங்கம் மற்றும்  பொதுச் செயலாளர்  காய்கனி அங்காடி) அவர்களிடம் 3000 வியாபாரிகளுக்கு ஹோமியோபதி நோய் எதிர்ப்பு மருந்து கொடுக்கப்பட்டது. 

இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தவர் முகப்பேர் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஐயா திரு. த.மகாராஜா அவர்கள் மற்றும் அயப்பாக்கம் பெருமாள் அவர்கள்.

அனைவருக்கும் நன்றியும் பாராட்டுக்களும் 

கருத்துகள் இல்லை: