பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார் நினைவுநாள். மே.26.
குமரிமாவட்டம்,ஆரல்வாய்மொழியில் பிறந்த கா.அப்பாத்துரையார் இலக்கியம்,வரலாறு, மொழி ஆய்வு,மக்கள் வரலாறு, திருக்குறள்,மெய்ப்பொருளியல், ஆராய்ச்சி முதலிய பல்வேறு துறைகளில் பல அரிய நூல்கள் தமிழ்மொழிக்கும் மக்களுக்கும் அளித்துள்ளார். தொடக்கத்தில் அரசுப்பணியாளர், ஆசிரியர்,இதழாசிரியர் என பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்துக் கொண்டவர். 170 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களை கலைஞர் அவர்களால் நாட்டுடைமையாக்கப்பட்டன. குமரிக்கண்டம்,தென்னாட்டுப் போர்க்களங்கள்,தமிழ் முழக்கம், தமிழன் உரிமை, தமிழகத்தின் அமைப்பு, 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம், இரு கடற்கோள்கள் ,இதுதான் திராவிட நாடு போன்ற நூல்கள் இவர் எழுதிய நூல்களாகும். 18 மொழிகள் அறிந்த பன்மொழி புலவராக திகழ்ந்தார்.
பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார் அவர்கள் தனது ஆரம்பக்காலம் முதலே தனித்தமிழ் பற்றாளராகத் திகழ்ந்துள்ளார். மறைமலை அடிகளாரிடம் அதிக தொடர்பு வைத்திருந்தார். 1937 இல் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி ஏற்பட்டபோது,"இந்திய மொழிச்சிக்கல்" என்ற அரிய ஆங்கில நூலை எழுதி,அதற்கு மறைமலை அடிகளாரிடம் விரிவான முகவுரையும் வாங்கி வெளியிட்டார்.கவியரசு கண்ணதாசனுக்கு ஆசிரியராக இருந்து இலக்கண இலக்கியங்களைக் கற்பித்து கொடுத்தார். மே.26 ,1989 இல் மறைந்த
பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையாரின் நினைவை போற்றுவோம்.
நன்றி: திரு.தமிழ்வானம் செ.சுரேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக