5 ஜூலை, 2020

நூல் நயம்

திரு.குறிஞ்சிவேலன் அறிவித்துள்ள பத்துநாள் பத்து நூல் அட்டை என்ற சங்கிலிக்கண்ணியில் இன்று நான். எதிர் வெளியீட்டில் வந்துள்ள-அந்தோன் சேக்கோவ்  சிறுகதைகளும் குறுநாவல்களும் - என்ற இந்நூலில் ஒரு சிறப்பு,  மாக்சிம் கார்க்கி செகவ் குறித்து எழுதிய நல்லதோர் கட்டுரை உள்ளது.இந்நூலில் செகவின் உலகப்புகழ்பெற்ற கதைகளான ஆறாவது வார்டு, பச்சோந்தி,  நாய்க்காரச் சீமாட்டி, வான்கா முதலான சிறுகதைளும், இயோனிச், மணமகள் முதலான குறுநாவல்களும் உள்ளன.இவை 19ஆம் நூற்றாண்டின் ரஸ்ய நாட்டின் சமூகப் பொருளாதார நிலைகள், சுகாதாரம், காவல்துறையினர் நிலை மக்களின் வாழ்நிலையைச் சொல்கின்றன.அவை நமது இந்திய நிலைக்கும்  அருகிலிருப்பதாக உணரச் செய்கிறது.செகவ் வாசகர்களின் உயர்பண்புகளையும், கூர்மதியையும் மதித்து எழுதுபவர் என்று போற்றப் பட்டவர். இந்நூலை வாங்கி வாசித்து நாம் நம்மை உணர்வோம்.
எதிர் வெளியீடு. 320.பக்கங்கள். 200.ரூபாய் தான்.
நன்றி நண்பர்களே.


கவிஞர் ஜனநேசன் 

கருத்துகள் இல்லை: