நன்றி: அறிவுஜீவி சுஜாதா வாசகர்கள் குழு
எழுத்து: திரு. Srinivasan Ramamoorthy
சுஜாதா எழுத்தின் தனித்தன்மை பற்றிய ஒரு சிறு பார்வை
கதை கருவை மட்டுமே மையமாக கொண்டு, வேறு எந்த குறிப்பிடத்தக்க அம்சங்களும் இல்லாமல் , எழுதப்படும் கதைகள் , ஒரு நிலையில் அலுப்பை உருவாக்கி விடும் .இது, தனி மனித மற்றும் சமூக பிரச்சினைகளை அடிப்படையாக கொண்ட கதைகளானாலும் சரி , மனிதனின் உள் எழுச்சியை வெளிப்படுத்த கூடிய வகையில் புனையப்பட்ட கதைகளானாலும் சரி, அனைத்திற்கும் பொருந்தும் ..
சுஜாதா அவர்களின் தனித்தன்மை, எந்த வகை கதையானாலும், அதன் கருவுடன் இணைந்து, அது சம்பந்த பட்ட விபரங்களை மிக எளிதாகவும், சுவை படவும் , நினைத்தே பார்க்க முடியாத வார்த்தை ஜால வர்ணனைகளுடன் தருவதுதான் .இதற்கு அவர் எழுதிய அத்தனை கதைகளில் இருந்தும் உதாரணங்கள் கொடுக்கமுடியும்
.""தேடாதே "" என்ற அவரது குறு நாவல் ஒன்றில் இருந்து அவ்வாறான ஜாலங்கள் சிலவற்றை பதிவிட்டு இருக்கிறேன் ..
""தேடாதே"" கதையின் கரு . அருணா என்னும் குட்டி நடிகை ஜி எஸ் என்னும் ப்ரீ லான்ஸ போட்டோக்ராபரை திருமணம் செய்ய இருக்கும் நிலையில் கொலை ஆகிறாள். மனம் உடைந்த ஜி எஸ், கொலையாளி தேடலை தொடங்கி, அவனை கண்டுபிடித்து, கொலை செய்ய முயற்சிக்கிறான்.. அவ்வளவுதான் ..
அனால் இந்த கதையின் கருவை சார்ந்த முக்கியமான விஷயம், கொலையாளியை நெருங்க அவனுக்கு கிடைக்கும் குழப்பமான தடயத்தை' image processing ' என்ற தொழில்நுட்பம் மூலம் அவன் அறிந்து கொள்வது ..(1983ல் இந்த தொழில்நுட்பம் மிகவும் புதிது ).விளக்கம் சுஜாதா வரிகளில் ..
""நீங்க இப்போ இமேஜ் ப்ராசஸிங்ன்னு எதோ பேசினீங்க .என்கிட்டே ஒரு போட்டோ இருக்கு .அதுல ஒரு பெண் அருணா.. பின்னால் ஒரு பத்தடி தூரத்தில் சுவரில் வட்டம் அல்லது சதுரமான்னு சொல்ல முடியாத ஒரு இமேஜ் ..அவுட் ஆப் போகஸ்.. அந்த பொருள்ல எழுத்து இருக்கு.. என்னன்னு தெரியல ..என்லார்ஜ் பண்ணினா குழப்பம்தான் பெரிசாகுது.. அதை என்னன்னு கண்டு பிடிக்க முடியுமா?""
""செய்யலாம் ..சில பிம்பங்களை கம்ப்யூட்டருக்கு கொடுத்து அதை சற்று தெளிவாக மாற்றி பார்க்க முடியும்.. உங்க கிட்ட அந்த பிரதி இருந்தா குடுங்க முயற்சி செய்து பார்ப்போம் ..""
இமேஜ் ப்ராசஸிங் முடிந்த பிறகு
""நீங்க கொடுத்த பிரதி இது.. எவ்வளவு குழப்பமா இருக்கு பாருங்க.. இதை கம்ப்யூட்டருக்கு கொடுத்து அலசி பார்த்து, பல வித சாத்திய கூறுகளை பார்த்து, ப்ரசஸிங் செய்த பிறகு ,புதுப்பிச்ச பிரதி எவ்வளவு தெளிவா இருக்கு பாருங்க ..""
""நான் கொடுத்த போட்டோ பிரதியின் அந்த குழப்பமான பகுதியை துல்லியமாக திருத்தி அமைத்து இருந்தது அந்த கம்ப்யூட்டர் . சுவரில் சின்ன ஆணி அடித்து அதில் மாட்ட பட்டிருந்த வட்ட வடிவமான ஒரு முள் கொண்ட தர்மாமீட்டர் அது. அதன் நடுவில்
Presented by
SUPERB TYRES
262 MR Road
Ambattur
என்ற எழுத்துக்கள் இருந்தன ""
கதை ஆசிரியர்கள் பொதுவாக 'அவன் போட்டோ நெகட்டிவை டெவெலப் செய்து பார்த்தான்' என்றுதான் எழுதுவார்கள். அதை சுஜாதாவின் எழுத்தில் பார்ப்போம்..
' டார்க் ரூமிலேயே என் அத்தனை சமர்த்தியங்களும் வெளிப்படும். எட்டடிக்கு ஆறடி பத்தடி உயரம் என்று ஏதோ சித்ரவதை சிறை போல உள்ளே கருப்பு பெயிண்ட் அடிக்க வேண்டிய அவசியம இல்லை.வெளிச்சம் புகாமல் இருந்தால் போதும். குழாய் தண்ணீர், டைமர், டெவலப்பிங் டேங்க் ,கிளேசிங் மெஷின், ட்ரிம்மர் ,பிரின்டிங் பாக்ஸ் ,தெர்மாமீட்டர், தராசு ,என்லார்ஜர் ,சோலார் கே .பி ...ஏன் விபரங்கள் ..அந்த இருட்டு அறையில்தான் என் சகல சக்திகளும் இருந்தன ..""
""மத்தியானம் அவளை எடுத்த ரோல்களை காசெட்டில் இருந்து இருட்டில் நீக்கினேன். ரீலை லோட் செய்து, டெவலப்பிங் டேங்கிற்குள் வைத்து ,பைன் கிரைன் டெவலப்பர் சேர்த்து ,மெதுவாக ஆட்டி ,ஆட்டி, தொட்டிக்குள் பிக்ஸெர் போட்டு மூணு நிமிஷம் அலைக்கழித்து, லைட்டை போட்டு ,மறுபடி தண்ணீரில் அலம்பி ,ரீல்களை உலர்த்தி தொங்க விட்டேன். நெகடிவ் சுத்தமாக வந்திருந்தது. நேராக என்லார்ஜ்மெண்ட் பண்ண உத்தேசித்து , ப்ரோமைட் பேப்பரை எடுத்து மெட்டல் சோடியம் ஸலஃபைட், கார்பனேட் கலவைகளில் அருணாவின் முதல் பிம்பம் பிறப்பதற்கு இரவு பதினோரு மணி ஆயிற்று ""
மேற்கண்டவை அவர் அன்றய, 1983 ம் ஆண்டு , போட்டோக்ராப் டெக்னலஜி பற்றி எழுதியவை .
அவர் இன்று இருந்திருந்தால் ,.
Light track imaging , Light emission techniques, Infrared photography.... போன்றவைகளை பற்றி நிசசயம் விவரித்து இருப்பார் .
நன்றி: திரு ஆர் சி நடராஜன், சுஜாதாவின் கடைசிப் பக்க ரசிகர் குழு & முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக