*இறைநிலை என்பது பெருவெளியே*
வற்றாயிருப்பு, பேராற்றல், பேறறிவு, காலம் எனும்
வளம் நான்கும் ஒன்றிணைந்த பெருவெளியே தெய்மாம்:
வற்றாத இந்நான்கும் விண்முதல் ஐம்பூதங்கள்,
வான்கோள்கள், உலகம், உயிரினம், ஓரறிவுமுதல் ஆறாம்:
வற்றாது பெருகிவரும் தன்வளர்ச்சியே தன்மாற்றம்:
வந்தவை அனைத்திலும், சீரியக்கம், இயல்பூக்கம்:
வற்றாது பெருகும் பேரண்டத்தில், உயிரினத்தில்,
வழுவாத செயல்விளைவு நீதியே கூர்தலறம்.
- வேதாத்திரி மகரிஷி
நன்றி : பாடலைத் தந்துதவிய அருள்நிதி திரு. ஆர். எம். ஆம். ராஜசேகரன் அவர்களுக்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக