17 ஜூலை, 2020

கவிதை நேரம் : ஆறும் கடலும்


கடலை அடையும் முன்பு பயம் கலந்த பதட்டத்தை அடைகிறது ஆறு

அவள் தான் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறாள் 

மலை உச்சி , பெரிய காட்டுப்பாதை, கிராம் என .

தன் முன்னால் பரந்து விரிந்த சமுத்திர  பிரம்மாண்டத்தை காண்கிறாள் 

ஒரேடியாக தொலைந்து  போவதைத் தவிர தன் முன்னால் வேறு எதுவும் இல்லை என எண்ணுகிறாள் 

திரும்பிச் செல்லவும் வாய்ப்பில்லை 

இதுவரை யாரும் திரும்பிச் சென்றதும் இல்லை 

இருத்தலின் விதியே திரும்பிச்செல்ல வாய்ப்பில்லை என்பதுதான் 

பயத்தைப் போக்க பெருங்கடலில் உள்நுழைதல் என்ற ஆபத்தை எதிர்கொண்டே ஆகவேண்டும் 

அங்கு தான் ஆறு  புரிந்துகொள்ளும் , தான் கடலில் தொலைந்து போகவில்லை தான் கடல் ஆகவே ஆகிறேன் என்று.

நன்றி : கவிஞர் மும்பை சுப்ரமணி 

கருத்துகள் இல்லை: