9 ஜூலை, 2020

கொரோனா நோயாளிகளுக்கான வழிமுறைகள்

கொரோனா வந்த பின்னர்  கொடுக்கும் உணவு முறைகள் இதுதான்.எனவே நாமும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக  இதனை வீட்டிலும் ,அலுவலகத்திலும்,நிறுவனம்களிலும், வியாபார இடம்களிலும்,தொழிற்சாலைகளிலும் எல்லா இடம்களிலும் இதனை பின்பற்றி  நம்மை காப்பாற்றி கொண்டு நம்மை சுற்றி இருப்பவர்களையும்  காப்பாற்றி  கொண்டு கொரோனா நோய் என்னும் கொடிய அரக்கனை வெல்வோம்.

எளிய உணவு முறைகள்தான்  எல்லாம்,மிக குறைந்த செலவுகள்தான்  ஆகும்.தொழிற்சாலை  அலுவலகம்  திறந்து வைத்து இருப்பவர்கள் கட்டாயம் இதனை அமுல்படுத்தவும்.

உழைத்து நம்மை இந்த அளவிற்கு உயர்த்தி விட்ட பணியாளர்களுக்கு சத்தான மதிய  உணவுகளை இலவசமாக கொடுங்கள்.,மக்களின் குடும்ப பொருளாதார சூழல் வேலைக்கு வராமல் இருக்கு முடியாது அதே சமயம் நம்மை நம்பி வேலைக்கு வரும் பணியலாளர்களை பத்திரமாக வீடு போய் சேர்ப்பதும்   நம் கடமையாகும் ..

அணைத்து பணியாளர்களுக்கும்  மருத்துவ  இன்சூரன்ஸ் இருப்பதை அட்டையை வாங்கி பார்த்து உறுதி செய்து கொள்ளவும்.இல்லாத நபர்களுக்கு மருத்துவ இன்சூரன்ஸ் எடுத்து கொடுங்கள்,மிக குறைந்த பணம்தான் வரும்.கூடுதலாக பொருளாதாரம் கொண்ட பெரு முதலாளிகள் Life Insurance எடுத்து  கொடுங்கள்.உங்களிடம் வேலை செய்யும் நபருக்கு ஏதேனும் ஆகி விட்டால் அவர்களின் இழப்பை நாம் சரி செய்ய முடியாது ஆனால்  அவர்களின் குடும்ப பொருளாதார நிலையையாவது ஓரளவிற்கு ஈடு செய்ய முடியும். 

குறிப்பு : 
--------------

முளைகட்டிய  பயிறு,அவித்த  முட்டை,பேரிச்சம்பழம்,Multi Vitamin,Vitamin C மாத்திரைகள்  இடைவேளைகளில் வழங்குங்கள்.

நன்றி :  SRM மருத்துவமனை மற்றும்
திரு. Sundaresan kumaresan.

கருத்துகள் இல்லை: