*PRPC சார்பில் கொரானா எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கும் நிகழ்வு*
இன்று (4.7.20) நேருபூங்கா கு.மா. வாரிய குடியிருப்பு பகுதியில் ஹோமியோபதி மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாமில் மருத்துவர்கள் *Dr.பூவேந்தன், Dr. கீதா ப்ரியா* உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.
அந்த பகுதியில் வசிக்கும் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கொரானா நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான *ஆர்சனிக் ஆல்பம் 30C* இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த பகுதியில் செயல்பட்டு வரும் *நேருபார்க் மக்கள் நல சங்கம்* என்ற அமைப்பினர், கொரானா நோய் பரவலை தடுப்பதற்காக, அரசு அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் மூலம் நோய் பரவலையும் தடுத்து உள்ளனர்.
ஹோமியோபதி நோய் எதிர்ப்பு மருந்தை அரசாங்கமே வழங்க வேண்டும் என சங்க நிர்வாகிகள் பலமுறை அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். ஆனால் தங்களுக்கு இதனைப் பற்றி எந்த வழிகாட்டலும் தரப்படவில்லை என அதிகாரிகள் மறுத்து உள்ளனர். அரசு இந்த மருந்தை உட்கொள்ளலாம் என பரிந்துரை செய்தாலும் மக்களுக்கு வழங்குவதற்கான எந்த வழிமுறையையும் ஏற்படுத்தவில்லை என்பது வேதனைக்குரிய செய்தி.
ஆனால் சங்க நிர்வாகிகளோ தங்கள் பகுதி மக்களுக்கு எப்படியாவது மருந்தை வழங்க வேண்டும் என்ற விடாமுயற்சியில் நம்மை அணுகினர்.
நமது வழக்கறிஞர்கள் மில்ட்டன், பார்த்தசாரதி, நூர்தீன் ஆகியோர் தங்களுக்கு அறிமுகமான மேலே குறிப்பிட்ட மருத்துவர்கள் மூலம் மருத்துவ முகாமை ஏற்பாடு செய்தனர். மக்கள் அனைவரும் வந்து ஆர்வத்துடன் மருந்தை பெற்றுக் கொண்டனர்.
இந்த பகுதியில் வாழும் மக்கள் பெரும்பான்மையோர் உழைத்து வாழும் மக்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவர் கீதா பிரியா, "இப்படி பொது விநியோகம் செய்யும் நேரங்களில் மக்கள் தங்களது அறியாமையால் ஒழுங்கை கடைபிடிக்காமல் இருப்பது உண்டு. ஆனால் இந்த பகுதி மக்களோ மிகுந்த கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டனர். அதற்கு இந்த பகுதியில் செயல்பட்டு வரும் சங்கத்தினர் தான் காரணமாக இருக்க முடியும். அவர்கள் மக்களை அணுகிய விதத்தை பார்க்கும்போது நான் இதை உணர்ந்தேன்" என நெகிழ்ச்சியோடு கூறினார்.
நாமும் மருத்துவர்களின் உணர்வுக்கு ஆட்பட்டோம். மக்கள் நலனுக்காக செயல்பட்டு வரும் நேருபார்க் மக்கள் நல சங்கத்தினரோடு பணியாற்றியதில் - கொரானா நெருக்கடி ஏற்படுத்தி வரும் இறுக்கமான மனநிலையில் இருந்து - தற்காலிகமான மகிழ்ச்சியான மனநிலையை பெற்றோம். இந்த உற்சாகத்துடன் எமது பணியை தொடர்வோம்.
*மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்*
சென்னைக் கிளை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக